சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு படையப்பா திரைப்படம் தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆனது. எத்தனையோ முறை படையப்பா படத்தை பார்த்து இருந்தாலும், தியேட்டரில் அந்த படத்தை பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே இல்லை என படம் பார்த்த அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். படையப்பா படத்தின் வசூல் எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1999ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியானத் திரைப்படம் தான் படையப்பா. இதில், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.

படையப்பா ரீ ரிலீஸ்: அண்மைக்காலமாக ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்களுக்கு ஜென்ஸிக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளுக்கு எந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என பேச்சுவார்த்தை நடந்த போது, ரஜினி தனக்கு பிடிச்ச படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, படம் கடந்த வாரம் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று தியேட்டரில் வெளியானது. பல முறை இந்த படத்தை தியேட்டரில் பார்த்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படத்தை தியேட்டரில் பார்க்கும் போது ஒரு பவர் வரும் அதை சொல்வதற்கே வார்த்தை இல்லை என்றும், இன்னைக்கு இல்ல என்னைக்குமே அவர் தான் சூப்பர் என திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீலாம்பரி ஃபேன்ஸ்: ரசிகர்களை இன்னும் மகிழ்விக்க படையப்பா படத்தில் வரும் மாஸ் அண்ட் கிளாஸ் காட்சியான ஊஞ்சலில் ரஜினி அமர்ந்து மாஸ் காட்டு காட்சியை ரீப்பீட் மோட்டில் போட்டு காட்டி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தினார் கமலா தியேட்டரின் உரிமையாளர். நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் பெண் ரசிகைகள் எழுந்து நின்று கைத்தட்டி ஆட்டம் போட்டு, நாங்க நீலாம்பரி ரசிகை என்று அலப்பறை செய்தனர்.
படத்தின் வசூல்: படையப்பா ரீ ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே உலகளவில் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்தது. பொதுவாக, மறுவெளியீடு செய்யப்படும் படங்களுக்கு பெரிய அளவில் வசூல் இருக்காது. ஆனால், 'படையப்பா' திரைப்படம் முதல் நாளே நல்ல வசூலை பெற்றது. Sacnilk தகவலின் படி படையப்பா திரைப்படம் இதுவரை ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தில் புது படங்கள் எதுவும் வெளியாகத நிலையில், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications