2023 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 106 பத்ம விருதுகளில் மூன்று பத்ம விபூஷன், ஐந்து பத்ம பூஷன் மற்றும் 45 பத்மஸ்ரீ என மொத்தம் 53 விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை வழங்கினார்.
பத்ம விருதுகள் என்பது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 2019 முதல் யாருக்கும் வழங்கப்படவில்லை.

பத்ம விருதுகள் என்பது கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருதை விதிவிலக்கான மற்றும் சிறப்பான சேவைக்காக வழங்கப்படுகிறது. உயர் பதவியில் சிறப்பான சேவைக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்மஸ்ரீ என்பது அனைத்து துறைகளிலும் சிறப்பான சேவை செய்ததற்காக வழங்கப்படுகிறது.
இந்த வகையில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களான ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் மிகச் சிறந்த முதலீட்டாளராக வலம் வந்த மறைந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கும் பத்மஸ்ரீ விருது இன்று வழங்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்த புரட்சிக்கும் பணிகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவருடைய மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-விடம் இருந்து பெற்றார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி செய்த சமுக சேவையை பாராட்டும் விதிமாக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ரஸ்னா குழுமத்தின் மறைந்த தலைவர் அரீஸ் கம்பட்டா (areez khambatta) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. இவர் குஜராத்-ஐ சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications