இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு முதல் நாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவர்களின் சாதனைகளைப் பொறுத்து பாரத ரத்னா போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று. அடுத்ததாக வழங்கப்படும் உயரிய விருதுதான் பத்ம விருதுகள். இதன் கீழ் 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகும். எனவே குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு பத்ம விருதுகளை பாராலிம்பிக் வீரர் ஹர்விந்தர் சிங், டாக்டர் நீர்ஜா பட்லட் ஆகியோர் பெற உள்ளனர்.
இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதுகள், பல்வேறு துறைகளில் விதிவிலக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. கோவாவைச் சேர்ந்த 100 வயதான சுதந்திரப் போராட்ட வீரர், ஆண் ஆதிக்கம் நிறைந்த துறையில் 150 பெண்களுக்கு பயிற்சி அளித்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தக் இசைக்கலைஞர் மற்றும் இந்தியாவின் முதல் பெண் பொம்மலாட்டக்காரர்கள் உள்ளிட்ட 30 நபர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

விருது பெறுபவர்களின் பெயர்கள்:
மருத்துவம்: டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான நீர்ஜா பட்லாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிதல், தடுப்பு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக ஆர்வலர்: சமூகத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட குழுவில் ஒன்றான முசஹர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக கடந்த 22 ஆண்டுகளாக "நயீ ஆஷா" என்ற அறக்கட்டளையின் மூலம் அயராது உழைத்ததற்காக போஜ்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பீம் சிங் பவேஷ் என்ற நபர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்.
இசைக் கலைஞர்: 50 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் கொண்ட தென்னிந்திய இசைக் கலைஞரான பி. தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இவர் பாரம்பரிய தமிழ் இசையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞராவார்.
விவசாயம்: எல் ஹாங்திங் என்ற நாகாலாந்தைச் சேர்ந்த பழ விவசாயி பத்மஸ்ரீ விருது பெறுகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்களை பயிரிடுவதில் நிபுணத்துவம் பெற்ற விவசாயியாவர்.
பத்ம விருதுகள் கலாச்சாரம் நடனம் சினிமா நாடகம் ஓவியம் சிற்பம் சட்டம் நீதி என பல்வேறு துறைகளில் சிறந்த பணியாளர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications