Pahalgam Terror Attack: 48 மணிநேர கெடு.. பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர், 17 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடந்தது.

Pahalgam Terror Attack: 48 மணிநேர கெடு.. பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்..!!

இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு-வின் (CCS) கூட்டம் நடைபெற்றது, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 25 இந்தியர்களும், ஒரு நேபாள நாட்டவரும் இறந்தனர். இதை தொடர்ந்து சில முக்கிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. CCS இந்த தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் 5 முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிரந்தரமான முடிவு கட்டும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டாரி எல்லை மூடல்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய எல்லைப் பகுதியான அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்து முற்றிலுமாக தடைபடும். இருப்பினும், ஏற்கனவே முறையான அனுமதி பெற்று பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் மே 1, 2025 க்கு முன்னர் அட்டாரி வழியாக திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், திரும்ப சென்றாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டினருக்கு திரும்புவதற்கான காலக்கெடு: முறையான அனுமதி பெற்று இந்தியா வந்த பாகிஸ்தான் நாட்டினர் மே 1, 2025 க்குள் அட்டாரி வழியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும். இந்த காலக்கெடுவுக்குப் பின்னர் அவர்கள் இந்தியாவுக்குள் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

விசா கொள்கையில் மாற்றம்: பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா கொள்கையில் இந்தியா அதிரடியான மாற்றங்களை செய்துள்ளது.

  • சார்க் நாடுகளுக்கான விசா விலக்கு திட்டம் பாகிஸ்தான் நாட்டினருக்கு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் பாகிஸ்தானியர்கள் இனிமேல் எளிதாக இந்தியாவிற்குள் நுழைய முடியாது.
  • பாகிஸ்தான் நாட்டினருக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து SVS விசாக்களும் (மாணவர்/சுற்றுலா/மருத்துவ விசா) உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
  • தற்போது இந்தியாவில் SVES விசாக்களின் கீழ் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானியர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

தூதரக நடவடிக்கைகள்: இரு நாடுகளின் தூதரக உறவுகளிலும் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விலக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் நபர்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் திரும்ப அழைக்கப்படுகிறார்கள். இரு தூதரகங்களிலும் இந்த ஆலோசகர் பதவிகள் இனிமேல் நிரப்பப்படாது. இப்பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

உயர் ஆணைய ஊழியர்கள் குறைப்பு: இரு நாடுகளின் உயர் ஆணையங்களிலும் அதாவுது High Commission-ல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மே 1, 2025 க்குள் 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும். இது இரு நாடுகளின் தூதரக செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் நீதிக்கான உறுதிப்பாடு: பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அனைத்து படைகளையும் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், சமீபத்திய தாக்குதல்களின் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+