பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் கடந்த சில மாதங்களாக இருந்த பதற்றம் தற்போது "ஓப்பன் வார்" நிலைக்கு உயர்ந்துள்ளது என பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா அசிஃப் தெரிவித்துள்ளார். இரு நாட்டு எல்லைகளில் துப்பாக்கிசூடு மற்றும் பிரங்கி தாக்குதல்கள் நடந்து வரும் வேளையில் பாதிஸ்தான் விமானம் வாயிலாக குண்டு மழை பொழிந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை தாண்டி தலைநகர் காபூல் நகரில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இரு நாடுகளையும் பிரிக்கும் டுரண்ட் கோட்டுக்கு (Durand Line) அருகே கடும் துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டோர்கம் எல்லைச் (Torkham border) சாவடி அருகே நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.

தாக்குதல்களுக்கு காரணம் என்ன?
இந்த தாக்குதல்களுக்கு காரணமாக, பாகிஸ்தானில் சமீபத்தில் அதிகரித்த வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறது பாக் அரசு. பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். அடுத்த சில நாட்களில், கிபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜௌர் பகுதியில் பாதுகாப்பு சாவடியில் வெடிபொருள் ஏற்றிய வாகனம் மோதி 11 ராணுவ வீரர்களும் ஒரு குழந்தையும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தாலிபான் பதில்:
ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித், டுரண்ட் கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக "பெரும் அளவிலான தாக்குதல் நடவடிக்கைகள்" மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். அதற்கு பதிலாக, பாகிஸ்தான் விமானப்படை காபூல், பாக்தியா மற்றும் கண்டஹார் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக தாலிபான் தரப்பு உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப், "நாங்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறோம். ஆனால் எங்கள்மீது எந்தத் தாக்குதலும் நடந்தால் ஆயுதப்படைகள் உறுதியாக பதிலளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகள் எண்ணிக்கை
பாகிஸ்தான் தகவல் அமைச்சர் Attaullah Tarar கூறுகையில், ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகள் 133 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த மோதல்களில் தங்கள் பாதுகாப்பு பணியாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தரப்பில் இருந்து வெளியான தகவல் படி, தங்கள் போராளிகள் 8 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர். அதேநேரம், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 ராணுவ தளங்கள் மற்றும் 19 ராணுவ முகாம்களை கைப்பற்றியதாகவும் அறிவித்துள்ளது.
இரு நாடுகளும் தங்கள் தரப்பு இழப்புகளை குறைத்தும், எதிர் நாட்டு இழப்புகளை அதிகரித்தும் கூறி வருகின்றன. உறுதிப்படுத்தப்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை.

உலக நாடுகளின் கவலை
இந்த மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi), இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா அரசு இரு நாடுகளும் எல்லையில் நடத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அரசுகள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நிலைமை எங்கு செல்கிறது?
கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றன. தற்போதைய குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடு மற்றும் விமானத் தாக்குதல்கள் ஆகியவை அதிகரித்துள்ளதால், இது முழுமையான போர் நிலைக்கு நகருமா என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான இந்த பதற்றம் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலையை பாதிக்கும் வகையில் மாறக்கூடும் என்பதால், உலக நாடுகளின் கவனம் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதலின் மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே சீனா - தைவான் ஆகிய நாடுகள் மத்தியில் போர் பதற்றம் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications