பாகிஸ்தான் தவிப்பு.. கிடைக்குமா 2 பில்லியன் டாலர்.. IMF கொடுக்குமா கிரீன் சிக்னல்..!

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில், ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பெற வேண்டிய 6.7 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை உயிர்ப்புடன் வைக்க முக்கியமான இலக்கை அடைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற முக்கியமான கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாகிஸ்தான் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து 6.7 பில்லியன் டாலர் அளவிலான கடன் உதவியை பெற, ஐஎம்எப் எக்ஸ்டர்னல் பைனான்சிங் கேப் மற்றும் எக்ஸ்சேடஞ்ச் ரேட் பாலிசி ஆகியவற்றில் முக்கியமான இலக்கை அடைய உத்தரவிட்டு உள்ளது. இதனாலேயே 6 மாதமாக ஐஎம்எப் திட்டம் தடைபெற்று நிற்கிறது.

பாகிஸ்தான் தவிப்பு.. கிடைக்குமா 2 பில்லியன் டாலர்.. IMF கொடுக்குமா கிரீன் சிக்னல்..!

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தனது 6 பில்லியன் டாலர் அளவிலான எக்ஸ்டர்னல் பண்டிங் கேப்-ஐ சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 6 பில்லியன் டாலர் இலக்கில் 4 பில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ள நிலையில், மீதமுள்ள 2 பில்லியன் டாலர் தொகையை திரட்டு முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சகம் வருகிற வெள்ளிக்கிழமை தனது வருடாந்திர பட்ஜெட் அறிக்கையை வெளியிட உள்ளது, இதற்குள் 2 பில்லியன் டாலர் நிதியை திரட்டி ஐஎம்எப் கடன் திட்டத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எதற்காக இந்த அவசரம்..? முக்கியமான காரணம் உள்ளது.

பாகிஸ்தான் - ஐஎம்எப் மத்தியிலான 6.7 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டம் ஜூன் மாத இறுதியில் முடிவாகிறது. இந்த காலக்கட்டத்திற்கும் IMF கொடுத்த இலக்கை முடிக்கவில்லை எட்டாமல் தோற்றுவிட்டால் மீண்டும் முதலில் இருந்து பாகிஸ்தான் நிதிநிலையை ஆய்வு செய்து புதிய கணக்கு, புதிய இலக்கு, புதிய தொகை நிர்ணயம் செய்யப்படும்.

IMF அமைப்பின் 6.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவிக்கு முக்கிய தடையாக இருப்பதே எக்ஸ்டர்னல் பைனான்சிங் கேப் மற்றும் எக்ஸ்சேடஞ்ச் ரேட் பாலிசி ஆகிய இரண்டும் தான். இதனால் 2 பில்லியன் டாலர் நிதியை எப்படியாவது திரட்ட வேண்டும் என்று பல்வேறு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரீகம் ஆகியவை சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நிதியுதவியாக அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல் சீனா மற்றும் சீன அரசு வங்கிகள் பாகிஸ்தானுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் கடனை புதிதாக கொடுத்துள்ளது.

இதை வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசு ஐஎம்எப் கடன் திட்டத்தை நம்பி இருக்கிறது. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டின் அதிகப்படியான உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள், இம்ரான் கான் கைது போன்ற பிரச்சனைகளும் இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+