பாகிஸ்தான் புதிய அறிவிப்பு.. சோகத்தில் மக்கள்..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய இசையை ஒளிபரப்புவதற்கு உடனடி தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) இந்த முடிவை அறிவித்த நிலையில், இது தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தாரர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் புதிய அறிவிப்பு.. சோகத்தில் மக்கள்..!!

பாகிஸ்தானில் இந்திய இசையின் ஆதிக்கம் மிகவும் அதிகம், கசல் பாடல்கள், குறிப்பாக பாலிவுட் பாடல்கள், பாகிஸ்தான் வானொலிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்திய பாடல்களை பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் வேளையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் (PBA) பொதுச் செயலாளர் ஷகீல் மசூத், நாடு முழுவதும் உள்ள எஃப்.எம் நிலையங்களில் இந்திய இசையை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார். இந்த முடிவை பிடிஐ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது. பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தாரர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.

பாகிஸ்தானின் இந்திய இசை தடைக்கு முன்பு, இந்திய அரசு காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டன. இதில் டான் நியூஸ், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், ஜியோ நியூஸ் போன்ற முக்கிய ஊடக நிறுவனங்களின் சேனல்கள் அடங்கும். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவே பாகிஸ்தான் இந்திய இசைக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது, இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை முடக்கியதற்கு இந்திய இசைக்கு தடை விதித்துள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும், இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்ற பீதியிலேயே பாகிஸ்தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+