பாகிஸ்தான் பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டு இருக்கும் வேளையில் சீனாவிடம் இருந்து 40 ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் தொகையைப் பெறப் பல்டி அடித்து வரும் வேளையில், இந்த போர் விமான வாங்கும் திட்டம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாகச் சீனாவிடம் இருந்து ஏற்கனவே அதிகப்படியான கடனை வாங்கிக்கொண்டு அதன் வலையில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்குகிறது. சீனா முதல் முறையாக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வெளிநாட்டுக்கு விற்கிறது.

இந்த போர் விமானங்கள் வாங்குவது குறித்து அதுவரையில் 2 நாடுகள் எவ்விதமான அதிகாரப்பூர்வம அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஊடகங்களிலும், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்டில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியில் பாகிஸ்தான் விமானப்படை (பிஏஎஃப்) இந்த விமானங்களை வாங்குவதை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், இந்த 40 ஜே-35 விமானங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் டெலிவரி செய்யப்படும் என்ற வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் பழுதாகி காலாவதியாகும் நிலையில், இந்த வெற்றிடத்தைச் சீனாவின் ஜே-35 விமானங்கள் நிரப்புகிறது.
பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டும் இந்த 40 சீனப் போர் விமானங்கள் அந்நாட்டின் வான்வழி பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதால் அண்டை நாடுகளாக இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்றவற்றைப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் கட்டாயம் உருவாகியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனம் தயாரிக்கப்பட்ட 100 K9 வஜ்ரா துப்பாக்கிகள் அதாவது ஆர்டில்லரி துப்பாக்கிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லடாக் போன்ற உயரமான பகுதிகளில் இந்த துப்பாக்கிகள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications