இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இதேவேளையில் எப்படியாவது ஐஎம்எப் உடன் ஒப்பந்தம் போட்டப்படி தனது நிபந்தனைகளை பூர்த்தி செய்து 6.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் மோசமான நிதிநெருக்கடி மற்றும் மந்தமான வர்த்தகம் நிலையை எதிர்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்த இக்கட்டான நிலையில் பெரும் நிவாரணமாக, சீனாவிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவிலான தொகை பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இதுக்குறித்து பாகிஸ்தான் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீனாவிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளன என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவே அறிக்கை வெளியிட்டு உள்ளதாகர மத்திய வங்கி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார், சமீபத்தில் சீன நாட்டிற்கான கடனை அடைக்க செலுத்தப்பட்ட 1.30 பில்லியன் டாலர் தொகையை சீனா இன்று அல்லது திங்கட்கிழமை மறுநிதியளிப்பு செய்யும் என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் நிதியமைச்சர் சீனா-வுடன் ஏற்கனவே பேசப்பட்டு வந்த 2 பில்லியன் டாலர் தொகைக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் அரசு தனது 6 பில்லியன் டாலர் அளவிலான எக்ஸ்டர்னல் பண்டிங் கேப்-ஐ சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 6 பில்லியன் டாலர் இலக்கில் 4 பில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ள நிலையில்..
தற்போது மீதமுள்ள 2 பில்லியன் டாலர் தொகையை திரட்டு முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த 2 பில்லியன் டாலர் தொகையை மீண்டும் சீனாவிடம் பெற முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியல் பிரச்சனைக்கு மத்தியிலும் மோசமான நிலையை அந்நாட்டு மக்களும், வர்த்தக சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த மோசமான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் அந்நாட்டின் முதலீட்டு சந்தை வேலைவாய்ப்பு சந்தை ஆகியவை அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications