இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த மோசமான நிலையில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பதற்காகப் பல மாத போராட்டத்திற்குப் பின்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 7 பில்லியன் டாலர் தொகையை கடனாக பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கடனும் பல நிபந்தனைகளோடு கொடுக்கப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் அரசு மிகவும் முக்கியமான முடிவை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு, தனது நிர்வாக செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்காக IMF உடன் ஒப்புக் கொண்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சுமார் 150,000 அரசுப் பணியிடங்களை நடைமுறையில் இருந்து நீக்கவும், ஆறு அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், இரு அமைச்சகங்களை ஒன்றாக இணைக்கவும் உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது பாகிஸ்தான் மக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பேரதிர்ச்சியாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் செப்டம்பர் 26 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கான 7 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த கடனில் முதல் தவணையாக 1 பில்லியன் டாலர் நிதியுடன் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த கடனை சிறப்பாக பயன்படுத்த IMF பாகிஸ்தான் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பதற்கும், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகள் மீது வரி விதிக்கவும், அரசின் மானியங்களை குறைக்கவும், சில அரசு நிதி பொறுப்புகளை மாநில அரசுக்கு மாற்றுவதற்கும் நிபந்தனை விதித்தது. இதை நடைமுறைப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்த பிறகு தான் IMF 1 பில்லியன் டாலர் தொகையை முதல் தவணையாக கொடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பிய அந்நாட்டு நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், IMF உடன் இறுதி பேச்சுவார்த்தை முடிந்து கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கான கடைசி கடன் திட்டமாக இருக்கும், இனி பாகிஸ்தான் கடன் வாங்காது என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் அமைச்சகங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒரு படியாக, ஆறு அமைச்சகங்களை மூடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் இரண்டு அமைச்சகங்கள் இணைக்கப்படும் என்று கூறினார். இதோடு பல அமைச்சகங்களில் சுமார் 150,000 அரசு பணிகள் நீக்கப்படும் என்றும் கூறி மக்களுக்கு உறுதி செய்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications