அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்.. அமைச்சர்களுக்கு சலுகை கட்.. மோதமான நிலையில் பாகிஸ்தான்..!

Pakistan: பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலை தான் இருந்து வருகின்றது. இத்தகைய சூழலில் இன்னும் மூன்று வாரத்தில் இன்னும் மோசமான நிலையை எட்ட கூடும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆய்வறிக்கையானது வெளியானது.

மலையளவு கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவை கண்டுள்ளது.

இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக சர்வதேச அளவிலான அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், மோசமான கடன் என பலவும் சவாலான காரணிகளாக உள்ளன.

 சம்பளம் குறைப்பு

சம்பளம் குறைப்பு

இப்படி பல காரணிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லாமல் தத்தளித்து வரும் நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 10% குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது செலவினைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவையிலும் செலவு குறைப்பு திட்டம்

அமைச்சரவையிலும் செலவு குறைப்பு திட்டம்

இதே அமைச்சகத்தின் பிரிவில் செலவினங்களை 15% குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டும் அல்ல மத்திய அமைச்சகர் மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து, 30 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி

இது குறித்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்த, தேசிய சிக்கனக் குழு இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடி வரும் நிலையில், பணவீக்கம், திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால் மக்கள் கடும் சிரமங்களை சந்திருக்கும் நிலையில், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது உணவு எரிபொருள், மின்சாரம் என பல துறைகளிலும் அழுத்தம் காணப்படுகின்றது.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

இந்த நிலையில் தான் சம்பள வெட்டுக்கள் என்பது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு உதவியாளர்களின் எண்ணிக்கையிலும் இந்த ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அரசு துறைகளுக்கு உயர் விலை கொண்ட வாகனங்கள், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் அமைச்சகர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை முடக்குவது குறித்தும் பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏர்லைன்ஸுக்கும் நிதி குறையலாம்

ஏர்லைன்ஸுக்கும் நிதி குறையலாம்

இதேபோல அரசு நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நிதிகள், குறிப்பாக மோசமான கடன் பிரச்சனையில் இருக்கும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் என்பது பெரும் சிக்கலை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு முக்கிய அமைப்புகளுக்குமான நிதியினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அணுகல்

சர்வதேச நாணய நிதியத்தின் அணுகல்

பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் நிதியினை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரைவில் ஒரு மதிப்பாய்வு குழுவினை அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தற்போது மேற்கொள்ள முடியாத சீர்திருத்தங்களை நாடு மேற்கொள்ள வேண்டும் என ஐ.எம்.எஃப் கூறியுள்ளது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

முக்கிய நடவடிக்கைகள்

முக்கிய நடவடிக்கைகள்

இது அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது மேற்கோண்டு விலையை அதிகரிக்கலாம். இதன் காரணமாக தேர்தல்களில் இழப்பு ஏற்படலாம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அஞ்சுகிறார். இதற்கிடையில் எப்படியேனும் வளர்ச்சிக்கு திரும்பி விட மாட்டோமா? என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+