பாகிஸ்தான் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்தியா உடனான போர் பதற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து அந்நாட்டைப் பாதுகாக்க, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகளை அதிரடியாக குறைத்து 11% ஆக அறிவித்தது.
பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கனவே படுமோசமாக இருக்கும் வேளையில் இந்தியா உடனான போர் பதற்றம் அந்நாட்டின் வர்த்தகத்தையும், மக்களின் வாழ்வியலையும் கடுமையாக பாதித்துள்ளது. ஒருப்பக்கம் இந்தியாவில் இருந்து எந்த பொருட்களும் பாகிஸ்தானுக்கு செல்ல கூடாது என இந்திய அரசு வர்த்தக தடையை விதித்துள்ளது. இதேபோல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது மூலம் அந்நாட்டின் விவசாயத்திற்கான நீர் ஆதாரத்திற்கு பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தானில் உணவு பொருட்களின் விலை விண்ணை முட்டியுள்ளது.

பாகிஸ்தான் மத்திய வங்கி, திங்கட்கிழமை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் வரி தாக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனை காரணமாக பொருளாதாகத்தில் நிச்சயமின்மை மற்றும் சவால்களை உருவாக்கலாம்" என்று கூறியது. இந்த வட்டி விகித குறைப்பு நாட்டில் போதுமான பணபுழக்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தை சரிவில் இருந்து காப்பாற்ற உதவும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய வங்கி, வரவிருக்கும் மாதங்களில் பாகிஸ்தானில் பணவீக்கம் சற்று உயரலாம் என்று எதிர்பார்க்கிறது. இது, பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் உயர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது.
ஐஎம்எப் கடன் உதவி மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம், கடந்த சில மாதங்களில் நிலையாக வளர்ச்சி பாதைக்கு திரும்பியது, பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் 29% வரி விதிப்பு, பாகிஸ்தானின் டெக்ஸ்டைல், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வரி விதிப்பு பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கலாம், அதேபோல வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும். பாகிஸ்தான் பொருளாதாரத்தில் ஏற்றுமதி வர்த்தகம் என்பது மிகவும் குறைவு என்றாலும், இந்த சிறு அளவும் அந்நாட்டின் அன்னிய செலாவணி, நாணய மதிப்பு, தொழிற்துறைக்கு முக்கியமாகும்.
இதை தாண்டி பாகிஸ்தான் இந்தியாவுடனான போர் பதற்றங்கள், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமையாக உள்ளன. இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. "இந்தியாவுடனான மோதல்கள், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி முயற்சிக்கு பின்னடைவாக இருக்கலாம்," என்று மத்திய வங்கி அதிகாரி தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டு (ஜூன் 2025 வரை), பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.5% முதல் 3.5% வரை வளர்ச்சியடையும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது. அடுத்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் உலகளாவிய நிச்சயமின்மை, இந்திய உடனான வர்த்தக போர் மற்றும் பருவநிலை மாற்றங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை குறைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக வாரியம் இந்த வாரம் கூடி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அளவிலான அடுத்த கடன் தவணைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

கடலில் கண்ணிவெடி!! புதிய குண்டை தூக்கி போடும் ஈரான்!! பதற்றமாவே வச்சி இருக்காங்களே!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications