பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் சிறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கராச்சியில் முன்னணி உணவகங்களில் வர்த்தகம் சுமார் 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
மிடில் கிளாஸ் மக்கள் உணவகங்களுக்கு வருவதை மொத்தமாகத் தவிர்த்துள்ளனர். மேலும் பாகிஸ்தானில் பிரெட், இறைச்சி மற்றும் அடிப்படையான அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
எரிபொருள்
பாகிஸ்தான் மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்களையும் முடிச்சு போடும் ஒன்றாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் புலம்புகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் டீசல் விலை 262 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விற்பனை
இதனால் கார்ச்சியில் இருக்கும் டோட்டல் பார்கோ பாகிஸ்தான் லிமிடெட்-க்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் ஒரு நாளுக்கு 15000 லிட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது விலை உயர்வின் காரணமாக 13000 லிட்டராகக் குறைந்துள்ளது.
மின் வெட்டு
மின்சாரம் அடுத்தப் பெரிய பிரச்சனை, பாகிஸ்தான் நாட்டில் பெரும்பாலான இடத்தில் மின் வெட்டு அதிகமாக இருக்கும் வேளையில் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வர்த்தகம், வருமானம் அனைத்தும் குறைந்துள்ளது.
இயல்பு வாழ்க்கை
இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் அந்நாட்டின் நிதியமைச்சக அறிவிப்பின் படி பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 249.80 ரூபாய், டீசல் விலை 262.80 ரூபாய், இதேபோல் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 189.83 ரூபாயாகவும், லைன் டீசல் ஆயில் 187 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நாணய மதிப்பு
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 269.27 ரூபாய், இதேபோல் இந்திய ரூபாய்க்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 3.26 ரூபாயாக உள்ளது. இதனால் இறக்குமதியில் பெரும் தடுமாற்றத்தையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் மக்கள்
பாகிஸ்தான் மக்களை அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சனைகள் பாதித்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் தற்போது நாடு முழுவதும் மக்கள் போராட்டம் செய்யும் நிலைக்குப் பாகிஸ்தான் நாட்டின் நிலை மாறியுள்ளது.
இரு பக்கமும் பாதிப்பு
ஒருபக்கம் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வரும் வேளையில், மறுபுறம் அரசியல் பிரச்சனைகள் தலைக்கு மேல் இருக்கும் காரணத்தால் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து மோசமான நிலையை அடைந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
மக்கள் தொகை எண்ணிக்கையில் உலகிலேயே 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து திவால் ஆகும் நிலையில் உள்ளது. இதேபோன்ற நிலை தான் கடந்த ஆண்டு இலங்கையை மோசமான பாதிப்புக்குத் தள்ளப்பட்டது.
பணவீக்கம்
பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 48 வருட உச்சத்தில் உள்ளது, இதன் மூலம் வளரும் நாடுகள் திவாலான போது இருந்த அதை வடிவத்தைப் பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது. உதாரணமாக இலங்கை, வெனிசூலா ஆகியவை இதேபோன்று தான் திவாலானது.
அந்நியச் செலாவணி
பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்துள்ளது, பொருளாதாரச் சரிவில் இருந்து அதைத் தடுக்கவே தற்போது ஐஎம்எப் குழு பரிந்துரைப் படி 170 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை விதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்க உள்ளது பாகிஸ்தான் அரசு.
17 நாள் இறக்குமதி
பிப்ரவரி 3 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 2.916 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது. இந்தத் தொகை 16 அல்லது 17 நாளுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications