இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்திலும் பின்தங்கியிருப்பது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் மக்கள் வறுமையில் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதேவேளையில் பாகிஸ்தான் அரசின் நிதி நிலை மோசமாக இருக்கும் காரணத்தால் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் உதவியைப் பெறக் கொள்கையில் பல மாற்றங்களை விதிப்பது மட்டும் அல்லாமல் அரசின் வருமானத்தை அதிகரிக்கப் பல சேவைகளுக்குக் கடுமையான வரி விதிக்கப்பட்டது வந்தது.

இதனால் அந்நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு என அடுத்தடுத்து பல பாதிப்புகள் உருவாகியது. இதற்கு உதாரணமாக ஒட்டுமொத்த பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 5000-க்கு குறைவான கார்கள் விற்பனையாகியுள்ளது, அந்நாட்டு மக்களுக்குப் பாஸ்போர்ட் பிரின்ட் செய்யக் கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு உள்ளது.
இந்த நிலையில்,பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார மாடல் அந்நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக இல்லை என உலக வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளது மட்டும் மட்டும் அல்லாமல் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இகுக்கும் பாகிஸ்தான் தனது கொள்கைகளை உடனடியாக மாற்ற வேண்டாம்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அனைத்தும் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சியை மோசமானதாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.
உலக வங்கியின் கன்டரி டைரக்டர் Najy Benhassine தனது பாலிசி விஷன் அறிக்கை சமீபத்தில் UNDP-யில் வெளியிடப்பட்டது, இதில் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார மாடல் வொர்க் ஆகவில்லை.
பாகிஸ்தான் தனது சக நாடுகளைக் காட்டிலும் பொருளாதாரத்தில் மோசமான நிலைக்குச் சென்றது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் வறுமையை ஒழிப்பதில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு மேம்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் வளர்ச்சி அளவு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என Najy Benhassine தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் பருவநிலை மாற்றத்திற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, ஏற்கனவே இயற்கை சீற்றம் மற்றும், கிளைமேட் ஷாக் மூலம் பல பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது என்று UNDP காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் எப்போது வேண்டுமானாலும் திவாலாகக் கூடிய சூழ்நிலையில் இருப்பதால் உலக வங்கியின் எச்சரிக்கை கடைசிச் சான்ஸ் ஆகப் பார்க்கப்படுகிறது. இதுவரையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்த வளைகுடா நாடுகள் தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால் இப்போது உதவுமா என்பது சந்தேகமே..!!


Click it and Unblock the Notifications