பாகிஸ்தான் நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் அந்நாட்டு அரசு எப்படியாவது நாட்டை திவாலாகாமல் காப்பாற்ற வேண்டும் என்ற ஓற்றை இலக்குடன் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு தனது ஒட்டுமொத்த நிர்வாகம், வருவாய் ஈட்டும் கட்டமைப்புகளின் விபரங்களை மொத்தமாக கொடுத்து பெரும் தொகையை கடனாக பெற முயற்சித்த வேளையில், IMF இக்கடனை அளிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதை செயல்படுத்தி வரும் பாகிஸ்தான் அரசுக்கு மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முக்கியமான பொருட்களின் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் ஏற்கனவே மோசமாக இருக்கும் காரணத்தால் அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போதுமான வருமானம் இல்லாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் உணவு பொருட்கள் முதல் எரிபொருள் வரையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வெங்காயம் விலை
பாகிஸ்தானில் மார்ச் 22 உடன் முடிந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் கோதுமை மாவின் விலை 120.66 சதவீதம் அதிகரித்துள்ளது, சிகரெட்டின் விலை 165.88 சதவீதம் அதிகரித்துள்ளது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது 108.38 சதவீதம் அதிகரித்துள்ளது, லிப்டன் தேயிலையின் விலை 94.60 சதவீதம் அதிகரித்துள்ளது.
டீசல் விலை
டீசல் விலை 102.84 சதவீதமும், வாழைப்பழம் 89.84 சதவீதமும், பெட்ரோல் 81.17 சதவீதமும், முட்டை விலை 79.56 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
51 பொருட்கள்
பாகிஸ்தான் நாட்டில் மக்கள் அதிகமாக நுகரும் 51 பொருட்களின் விலையை கண்காணிக்கப்பட்டு வேளையில், கண்காணிக்கப்பட்ட 51 பொருட்களில், 26 பொருட்களின் விலை அதிகரித்தது, 13 பொருட்களின் விலை குறைந்துள்ளது, 13 பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
பாகிஸ்தான் பணவீக்கம்
இதனால் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் மார்ச் 22 உடன் முடிந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகமாக நுகரும் பொருட்களின் விலை உயர முக்கியமான காரணம் அதன் சப்ளை டிமாண்ட் பிரச்சனை தான்.
இறக்குமதி
பாகிஸ்தான் பெரும்பாலான பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வரும் வேளையில், அந்நாட்டின் அன்னிய செலாவணியை பாதுகாக்க இறக்குமதி செய்யும் பொருட்களை பெரிய அளவில் குறைத்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை மொத்தமாக முடங்கி, இப்பிரிவு வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு
மார்ச் 17, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில், பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10.14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் சீனா கொடுத்த நிதியுதவி தான், ஆனாலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு தளர்த்தவில்லை, இதேவேளையில் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளதால் பல முக்கியமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications