பாகிஸ்தான் மக்களை வாட்டும் நீரிழிவு நோய்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

உலகளவில் சுமார் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 90% பேர் 2ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். 2019 ஆம் ஆண்டுத் தரவுகள் படி இந்திய மக்கள் தொகையில் சுமார் 8.9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு படி, 2022 இல் பாகிஸ்தான் நாட்டில் சுமார் 26.7% மக்களுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்த வழக்குகளின் எண்ணிக்கை தோராயமாக 33,000,000 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.

பாகிஸ்தான் மக்களை வாட்டும் நீரிழிவு நோய்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

இந்த நிலையில் அந்நாட்டு மக்களின் நீரிழிவு நோய்-க்கான மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பாகிஸ்தானும் சீனாவும் மருந்துத் துறையில் தனது ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் பாகிஸ்தானில் முன் நிரப்பப்பட்ட இன்சுலின் பாசஜின் பேனாவை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த இன்சுலினை பாகிஸ்தான் கெட்ஸ் பார்மா மற்றும் சைனா கேன்&லீ பார்மாசூட்டிகல்ஸ் இணைந்து உருவாக்கியது. இது சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மருந்து ஒத்துழைப்பில் மேலும் வளர்ச்சியைக் குறிக்கிறது.

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் நியாண்டர் செல்வன் என்பவர் செய்த பதிவில் பாகிஸ்தானில் சத்தமில்லாமல் நடந்து வரும் ஒரு பேரழிவு மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுமார் 30% பாகிஸ்தானியர்கள் டயபடிஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகிலேயே மிகக் கூடுதலான விகிதம் இது எனக் கூறப்படுகிறது

இதற்கு அடுத்த நிலையில் பிரெஞ்சு பாலினிசியா தீவுகள். அங்கே 25% பேருக்கு டயபடிஸ், அதற்கு அடுத்து குவைத் 24%, இந்தியாவில் சுமார் 10%, அமெரிக்காவில் 10%, சீனாவில் சுமார் 10%, பாகிஸ்தானில் இப்படி டயபடிஸ் கட்டுக்கடங்காமல் பரவி இருப்பது உலகெங்கும் பல சுகாதார அமைப்புகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

எந்தொரு நாடாக இருந்தாலும், ஆரோக்கியமான இளம் தலைமுறையினர் அவசியம். காரணம் அவர்களின் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் 30% பாகிஸ்தானியர்கள் டயபடிஸால் பாதிப்பு என்பது பெரும் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செல்வன் பதிவில் பாகிஸ்தான் நாட்டின் இந்த நிலைக்கு இதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் குறிப்பிடுவது மக்கள் தொகை அடர்த்திதான். பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான நகர்ப்புற பள்ளிகள் மிகக் குறுகலான இடத்தில் விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் அமைக்கப்பட்டு இருக்கின்றன. நகரமயமாக்கலால் கிரிக்கெட் விளையாட இருந்த இடங்கள் எல்லாம் கட்டிடங்கள் ஆகிவிட்டன.

இதனால் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி இல்லை, நம் ஊர் போலவே நகரெங்கும் பிரியாணிக்கடைகள் பரவியதும், வீட்டுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யும் ஆப்புகள் இருப்பதையும் முக்கியக் காரணமாகக் கூறுகிறார்கள்.

விழாக்காலங்களில் இனிப்புகள் உண்பதும் அதிகரித்துள்ளது. சர்க்கரை வியாதி பற்றிய புரிதலோ, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் எனும் விழிப்புணர்வோ இல்லை. இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளின் விலையும் அதிகம்.

தனக்கு டயட்படிஸ் இருக்கிறது என்பதே தெரியாமல் கைகாலை வெட்டி எடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றியபின் தான் பலருக்கும் சர்க்கரை பரிசோதனை செய்யப்படுகிறது என்ற சூழல் பாகிஸ்தானில் நிலவி வருகிறது.

உலகெங்கும் சர்க்கரை அரக்கனை ஒழிக்கப் போதுமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டு, குப்பை உணவுகள் குறித்து விழிப்புணர்வும், உடல்பயிற்சி குறித்த பிரசாரமும் செய்யப்பட வேண்டும். நம் கிராமங்களிலும் இது மாதிரி சோதனைகள் நடத்தப்படவேண்டும்.

ஏழ்மையும், மருத்துவ விழிப்புணர்வின்மையும், குப்பை உணவுகளும், நகரமயமாக்கலால் உடல்பயிற்சி மறுக்கப்படுதலும் ஒரு சமூகத்தில் விளைவிக்கும் விளைவுகள் வருந்தத்தக்கவை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+