பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது, இது அடுத்தச் சில வாரங்களுக்குத் தொடர்ந்தால் கட்டாயம் பாகிஸ்தான் நிலை மோசமாகும் எனப் பல ஆய்வுகள் வெளியாகி வரும் வேளையில் சில நாட்களுக்கு முன்பு ஃபிட்ச் மற்றும் மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் கூட, பாகிஸ்தான் நாட்டின் தரத்தை திவாலாகும் நிலைக்கு இணையான ரேட்டிங்-ஐ கொடுத்தது.
பாகிஸ்தான் திவாலானால் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, UAE, சீனா ஆகியவை உதவக் கூடும் எனப் பலரும் நம்பினாலும் இதற்கான சிக்னல் எதுவும் இல்லாத காரணத்தால் ஐஎம்எப் அமைப்பின் 6.5 பில்லியன் டாலர் கடனுக்கு இவ்வமைப்பு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் 24 மணிநேரத்தில் 3 நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது வியப்பான விஷயமாக உள்ளது.
சீனா உதவி
பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கச் சீனா அரசு சார்பில் அந்நாட்டின் மிகப்பெரிய வங்கி சுமார் 700 மில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குச் சீனாவின் திடீர் பண உதவி பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
700 மில்லியன் டாலர் நிதியுதவி
சீனாவின் நிதியுதவியைத் தொடர்ந்து பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் ட்விட்டரில் சீனாவின் 700 மில்லியன் டாலர் தொகையை சீனா வளர்ச்சி வங்கியில் இருந்து பாகிஸ்தான் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆ பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. இந்த 700 மில்லியன் டாலர் வைப்புத் தொகை பாகிஸ்தானுக்கு "உயிர்நாடி" என்று குறிப்பிட்டார்.
சீன கடன் வலை
அரசுக்குச் சொந்தமான சீனா டெவலப்மென்ட் பேங்க் மூலம் அளிக்கப்பட்ட கடன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைச் சுமார் 20% உயர்த்தும். சீனா ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டிற்கு அதிகளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30% சீன வங்கியை சார்ந்துள்ளது.
ஈரான் உதவி
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் ஆறு எல்லைச் சந்தைகளை நிறுவியுள்ளது என்று ஈரான் கவுன்சில் ஜெனரல் ஹசன் நூரைன் தெரிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களில், இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 2 பில்லியன் டாலர்களை எட்டியது. இது 5 பில்லியன் டாலர் வரையில் உயர இலக்கு நிர்ணயம் செ்யயப்பட்டு உள்ளது.
விசா கொள்கை
பாகிஸ்தான் - ஈரான் மத்தியில் நிதி பரிமாற்றத்திற்கு முறையான
வங்கி சேனல் இல்லாததால் வர்த்தகம் செய்வதில் சிரமம் இருப்பதாகவும் நூரேன் கூறினார். மேலும் ஈரான் பாகிஸ்தான் விசா கொள்கையும் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும், பாகிஸ்தானுடனான பண்டமாற்று வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
உஸ்பெகிஸ்தான் உதவி
உஸ்பெகிஸ்தான் தலைநகரான Tashkent-ல் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில் உஸ்பெகிஸ்தான் பாகிஸ்தானுடன் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தக-பொருளாதார மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பாகிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் (IGC) 8வது கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உஸ்பெகிஸ்தான் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை பரிமாற்றம்
இரு நாடுகளும் சரக்கு மற்றும் சேவை பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் எந்தவொரு முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்பும் அதன் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக வரும்.
ஐஎம்எப் அமைப்பு
ஐஎம்எப் அமைப்பு பாகிஸ்தானுக்கு அளிப்பதாக அறிவித்துள்ள 6.5 பில்லியன் டாலர் அளவிலான கடனில் முதல் தொகுப்பான 1.1 பில்லியன் டாலரை தொகையைப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் இன்று பாகிஸ்தான் அரசு செலவுகளைக் குறைக்கும் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications