கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவி வகித்தார். ஆனால் ஏப்ரல் 2022, அந்நாட்டு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் ஆனார் ஷெபாஸ் ஷெரீப்.
இதன் பின்பு பாகிஸ்தான் பொருளாதாரம் பாதிப்பு, ஆட்சி மாற்றம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு, இம்ரான் கான் கைது என பல விஷயங்கள் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றியது. இந்த நிலையில் இம்ரான் கான் சொத்து மதிப்பு, வருடைய ஹெலிக்காப்டர் பயணமும் தற்போது திரும்ப பேச்சப்பட்டு வருகிறது.

இம்ரான் கான் மொத்த நிகர மதிப்பு கிட்டதட்ட 50 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் 410 கோடி ரூபாய். 70 வயதான முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். இவரிடம் ரியல் எஸ்டேட் சொத்துக்கள், கார்கள் என பல இருந்தாலும், இவருடைய ஹெலிக்காப்டர் பயணம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள பானி காலா என்னும் பகுதியில் 181,500 சதுரடியில் 750 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையை சொந்தமாக வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் 29 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடும் அவருக்கு சொந்தமாக உள்ளது.
தோடு 8 லட்சம் டாலர் மதிப்பிலான பண்ணை வீட்டையும் இம்ரான் கான் வைத்துள்ளார். இதோடு நிற்கவில்லை இம்ரான் கான் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார் மற்றும் விவசாய நிலங்களில் முதலீடு செய்துள்ளார்.
இந்த விஷயம் பலருக்கும் விசித்திரமாகத் தோன்றலாம் ஆனால் உண்மையில் இம்ரான் கான் பெயரில் எந்தொரு வாகனமும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அவர் வேலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் பயன்படுத்தியது தான் இன்றும் முக்கியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
இம்ரான் கான் தனது வீட்டிற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் 2019 முதல் 2021 வரையில் அதிகளவில் அந்நாட்டின் VVIP ஹெலிகாப்டர்-ஐ பயன்படுத்தியது உண்டு. இதற்காக பாகிஸ்தான் அரசு சுமார் 100 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தகவல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இம்ரான் கான் பெயரில் கார்கள் எதுவும் இல்லையென்றாலும் அவர் அதிகம் பயன்படுத்தும் டோயோட்டா லேண்டு க்ரூசர் காரின் மதிப்பு 3.5 கோடி ரூபாய், மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் s600 காரின் மதிப்பு 12.26 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications