பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எம் அமைப்பிடம் 6.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பெற காத்திருக்கும் வேளையில், சீனா அடுத்தடுத்து பெரும் தொகையை கடனாக அளித்து வருகிறது.
ஐஎம்எப் அமைப்பின் மாபெரும் கடன் திட்டத்தின் முதல் தவணையான 1.1 பில்லியன் டாலர் கடன் தவணையை பெற காத்துக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் சீனா 700 மில்லியன் டாலர் அளவிலான கடனை நிதியாக கொடுத்து அந்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தியது.
இந்த நிலையில் புதிதாக 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் - சீனா
பாகிஸ்தான் அரசு அடுத்த சில நாட்களில் திவாலாகும் நிலையில் இருந்த காலக்கட்டத்தில் தான் இந்த வார துவக்கத்தில் 700 மில்லியன் டாலர் அளவிலான கடனை சீன அரசு அந்நாட்டின் பொதுத்துறை வங்கியான சீன வளர்ச்சி வங்கியின் வாயிலாக கடனை அளித்தது. இதை தொடர்ந்து மீண்டும் சீன அரசு Industrial and Commercial Bank of China Ltd (ICBC) வாயிலாக 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார்.
1.3 பில்லியன் டாலர் கடன்
இப்புதிய கடனுக்கான முதல் தவணையாக 500 மில்லியன் டாலரை அடுத்த வாரத்தின் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை கிடைக்கும் என்றும், அடுத்த 500 மில்லியன் டாலர் கடனை அடுத்த 10 நாளில் அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் அறிவித்தார். இப்புதிய கடனுக்கான அனைத்து நடைமுறைகளும் வெள்ளிக்கிழமை இரவில் நடந்து முடிந்ததாகவும்.
பாகிஸ்தான் நிதியமைச்சர்
கடந்த சில மாதத்தில் பாகிஸ்தான் சீனாவுக்கு திருப்பி செலுத்திய 1.3 பில்லியன் டாலர் கடனை தான் தற்போது சீனா மீண்டும் பாகிஸ்தானுக்கு அளிப்பதாகவும் பாகிஸ்தான் நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ஸ்பெஷல் பிரெண்டான சினாவுக்கு பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரிப் நன்றி தெரிவித்துள்ளார்.
எக்ஸ்டர்னல் டெபிட்
பாகிஸ்தான் தனது பொருளாதார பெரிய அளவில் மேம்படுத்த முடியாமல் தொடர்ந்து அதிகளவிலான கடன்களை வாங்கியே தனது நிதிநிலையை சரி செய்து வந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் எக்ஸ்டர்னல் டெபிட் மட்டும் 22 பில்லியன் டாலர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமானால் 17.87 லட்சம் கோடி ரூபாய்.
அந்நியச் செலாவணி
பாகிஸ்தானின் நிகர அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 17 நிலவரப்படி சுமார் 3.2 பில்லியன் டாலராக உள்ளது. ஜனவரி மாதத்தில் 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது, இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு தனது நட்பு நாடுகளிடம் உதவிகளை நாடியது.
ரேட்டிங்
இந்த வேளையில் குளோபல் ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் பாகிஸ்தானின் சவ்ரின் கடன் மதிப்பீட்டை 'Caa1' இலிருந்து 'Caa3' ஆகக் குறைத்துள்ளது. இது கடந்த 30 வருடத்தில் மிகக் குறைவான மதிப்பீடாகும்.


Click it and Unblock the Notifications