இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும், பொருளாதார பாதிப்பிலும் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எப் அமைப்பின் 6.7 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை பெற தீவிரமாக முயற்சி செய்வது மட்டும் அல்லாமல் கூடுதலாக சேவைப்படும் 2 பில்லியன் நிதி ஆதாரத்தை திரட்ட போராடி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டு உள்ளது, வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பொருளாதாரத்தை திவாலாவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை பல கட்ட ஆய்வுக்கு பின்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் பல கட்டமாக செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ள வேளையில் இந்த பட்ஜெட் அறிக்கையில் இந்த நிதியாண்டில் 3.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையிலும் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷ்க் தார் அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி குறைந்து வரும் வேளையில் பாதுகாப்பு துறைக்கு 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணவ இயக்க செலவு பிரிவுக்கு 7.7 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்தது. 2023 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 19.4 சதவீதம் குறைந்து 6.2 பில்லியன் டாலர் தொகையை ஒத்துக்கீடு செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் 8.92 பில்லியன் டாலரை ஒப்பிடுகையில் 2023ல் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு கடந்த சில வாரங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற திட்டத்துடன் அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அளவு தொடர்ந்து குறைவதை தடுக்கும் முயற்சியாக பண்டமாற்று வர்த்தகத்தை கையில் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசு பெட்ரோலியம், எல்என்ஜி, நிலக்கரி, கோதுமை, பருப்பு வகைகள், கனிமங்கள், உலோகங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 38 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இதேபோல் சென்சிடிவ் விலைக் குறியீடு (எஸ்பிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 48 சதவீதமாக உயர்ந்திருந்த நேரத்திலும் பாகிஸ்தான் ரூபாய் நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ள வேளையில் அந்நாட்டு அரசு பண்டமாற்று வர்த்தகத்தை கையில் எடுத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications