பாகிஸ்தான் அரசு எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி உலக வங்கியிடம் கூடுதலாக கடன் கோரி பின்னர் தாங்கள் அவ்வாறு கோரவில்லை எங்களின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என சப்பை கட்டு கட்டியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தான் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது கட்டமாக பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் பாகிஸ்தான் அரசு உலக வங்கியிடம் கூடுதலாக கடனை விடுவிக்க கோரி கோரிக்கை வைத்தது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகார பிரிவு உலக வங்கியை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது என தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச்சந்தை விழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து திடீரென பாகிஸ்தான் பொருளாதார விவகார பிரிவு தங்களுடைய எக்ஸ் தள கணக்கு செய்யப்பட்டு விட்டதாகவும் தாங்கள் அந்த பதிவை வெளியிடவில்லை என்றும் திடீரென அறிவித்தது. வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு அடுத்த கட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க இருக்கிறது. இந்த சூழலில் தான் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான எக்ஸ் தள கணக்கில் கூடுதல் நிதி கோரி ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
பின்னர் திடீரென அந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக , வியாழக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களின் 15 ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவியது. இதனை இந்தியா தன்னுடைய எஸ் 400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பை கொண்டு சர்வசாதாரணமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் லாகூர் இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.


Click it and Unblock the Notifications