பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலையில் இருக்கும்போது, 3 நடப்பு நாடுகள் பல வகையில் உதவினாலும் அதில் சீனா மட்டும் தான் 700 மில்லியன் டாலர் என்ற பணமாக கொடுத்து நிதியுதவி செய்துள்ளது. மற்ற நாடுகள் வர்த்தகத்தை எளிதாக்கும் சலுகை தான், ஓடாத குதிரையில் யார் பந்தையம் கட்டுவார்கள்.
பாகிஸ்தான் பொருளாதார திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி அந்நாட்டின் பெயரில் மலைபோல் குவிந்துக்கிடக்கும் கடனை எப்படி அடைக்க போகிறது என்பது தான்.
பாகிஸ்தான் தனது பொருளாதார பெரிய அளவில் மேம்படுத்த முடியாமல் தொடர்ந்து அதிகளவிலான கடன்களை வாங்கியே தனது நிதிநிலையை சரி செய்து வந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் எக்ஸ்டர்னல் டெபிட் மட்டும் 22 பில்லியன் டாலர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமானால் 17.87 லட்சம் கோடி ரூபாய்.
பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் அரசு நிதி பற்றாக்குறை காரணமாக மக்களுக்கு அடிப்படை சேவைகளை கூட முழுமையாக அளிக்க முடியாமல் தவித்து வரும் வேளையில் தான் ஐஎம்எப் அமைப்பிடம் கடன் கேட்டு காத்திருக்கிறது. சுமார் 6.5 பில்லியன் டாலர் கடனில் முதல் தவணையான 1.1 பில்லியன் டாலரை பெற பல நூறு கோடி மத்திப்பிலான வரியை திரட்ட புதிய அறிவிப்புகள் வெளியானது.
செலவுகள் குறைப்பு
இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசு துறைகளுக்கு பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்
டிசம்பர் 2022 நிலவரப்படி, பாகிஸ்தான் அரசின் வெளிநாட்டுக் கடன் 17.87 டிரில்லியன் ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்), இது செப்டம்பர் 2022 இல் 18 டிரில்லியன் ரூபாயாக இருந்து கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு
பாகிஸ்தானின் நிகர அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 17 நிலவரப்படி சுமார் 3.2 பில்லியன் டாலரா உள்ளது. ஜனவரி மாதத்தில் 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது, இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு தனது நட்பு நாடுகளிடம் உதவிகளை நாடியது.
சீனா அரசு உதவி
பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கச் சீனா அரசு சார்ப்பில் அந்நாட்டின் மிகப்பெரிய வங்கி சுமார் 700 மில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குச் சீனாவின் திடீர் பண உதவியது.
மூடிஸ் ரேட்டிங்
இந்த வேளையில் குளோபல் ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் பாகிஸ்தானின் சவ்ரின் கடன் மதிப்பீட்டை 'Caa1' இலிருந்து 'Caa3' ஆகக் குறைத்துள்ளது. இது கடந்த 30 வருடத்தில் மிகக் குறைவான மதிப்பீடாகும்.


Click it and Unblock the Notifications