ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 96 டாலரை கடந்து 8 வருட உச்சத்தை தொட்டு உள்ள காரணத்தால் உலகில் அனைத்து நாடுகளிலும் எரிபொருள் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
அடுத்த சில வாரங்களுக்கு ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை தொடர்ந்தாலோ அல்லது ரஷ்யா உக்ரைன் நாட்டிற்கு நுழைந்தாலோ கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 105 டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத வேளையில் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 12.03 ரூபாய் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் சிக்கிதவித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு மக்கள் மத்தியில் பெட்ரோல் விலை உயர்வு மூலம் குண்டை போட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் தொடர்ந்து சுமையை ஏற்க முடியாத அந்நாட்டு அரசு பெட்ரோல் விலை உயர்த்தியுள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் பாகிஸ்தான் நாட்டில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.03 ரூபாயும், ஹைய் ஸ்பீட் டீசல் விலை 9.53 ரூபாயும், லைட் ஸ்பீட் டீசல் விலை 9.43 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை 10.08 ரூபாயும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
இங்கு குறிப்பிட்ட விலை அனைத்து பாகிஸ்தான் ரூபாய் அடிப்படையிலானது. இந்தியாவின் ஒரு ரூபாய் பாகிஸ்தானில் 2.35 ரூபாய் மதிப்புடையது. 2017 முதல் இந்திய ரூபாய்க்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
பிப்ரவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 147.82 ரூபாயில் இருந்து 159.86 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் ஹைய் ஸ்பீட் டீசல் விலை 144.622 ரூபாயில் இருந்து 154.15 ரூபாயாகவும், லைட் ஸ்பீட் டீசல் 114.54 ரூபாயில் இருந்து 123.97 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 116.48 ரூபாயில் இருந்து 126.56 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
5 மாநில தேர்தல்
இந்தியாவில் 5 மாநில தேர்தல், பட்ஜெட் ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 3 மாதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளது. குறிப்பாக தேர்தல் காரணமாக கச்சா எண்ணெய் விலை 8 வருட உச்சத்தை தொட்டும்
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications