பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கத் தனது நட்பு நாடுகள் உதவாத நிலையில் IMF மட்டுமே உதவி கரம் நீட்டம் வேளையில், இந்த நிதியுதவியைப் பெற முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஐஎம்எப் விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரி விதிப்பைக் கொண்ட மினி பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டது.
இதன் படி புதன்கிழமை இரவு பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் எரிவாயு மீதான வரியை உயர்த்தி வரலாறு காணாத உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவியைப் பெறுவதற்காக மட்டுமே இந்த மினி பட்ஜெட் வெளியிட்டு அந்நாட்டு அரசு வரி உயர்வை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் மக்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் அரசு
புதன்கிழமை பாகிஸ்தான் அரசு தனது மினி பட்ஜெட் அறிக்கையை வெளியிட்ட பின்று அந்நாட்டில் பெட்ரோல் விலை 272 ரூபாயாக அதிகரித்துள்ளது, அதாவது ஒரே நாளில் 22 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சகம்
பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் அதிகளவிலான சரிவை பதிவு செய்த நிலையில் பெட்ரோல் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை
இதேபோல் ஹைய் ஸ்பீட் டீசல் விலை 17.20 ரூபாய் அதிகரித்து 280 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மண்ணெண்ணெய் விலை 12.90 ரூபாய் அதிகரித்து 202.73 ரூபாயாகவும், லைட் டீசல் ஆயில் விலை 9.68 ரூபாய் அதிகரித்து 196.68 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தப் புதிய எரிபொருள் விலை வியாழக்கிழமை 12 மணி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமான கண்டிஷன்
ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவியைப் பெறுவதற்கு முதலும் முக்கியமான கண்டிஷன் அனைத்து எரிபொருள் விலையும் அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஐஎம்எப் நிதியுதவி செய்யும் முன்பு பாகிஸ்தான் வருவாய் ஈட்டுவதில் போதுமான நிலையில் உள்ளதாக என்பதை உறுதி செய்ய இந்தக் கண்டிஷன்களை வைத்துள்ளது.
பாகிஸ்தான் நிதி நிலைமை
பாகிஸ்தான் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் அடிப்படை சேவைகள் கூட முழுமையாகப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம் திவால் ஆகாமல் காப்பாற்ற ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடம் புதிய நிதியுதவிக்காக முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
ஐஎம்எப் நிதியுதவி
இந்த நிலையில் மீண்டும் ஐஎம்எப்-யிடம் நிதியுதவி பெற முடிவு செய்து 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் திட்டத்திற்காக IMF உடனான ஒப்பந்தத்தைச் செய்யப் பாகிஸ்தான் அரசு 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை மின் பட்ஜெட் வாயிலாக அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி
மேலும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 115 பில்லியன் டாலர் அளவிலான வரியை வசூலிக்க உள்ளது. மீதமுள்ள 55 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை நிதியியல் மசாதா 2023 கீழ் திரட்ட உள்ளது.
ஐஎம்எப் கடன்
ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு 2019ல் 6 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அறிவித்தது, தற்போது இத்திட்டத்தை 7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications