பாகிஸ்தான் நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரும் நிலையில் போதுமான எரிபொருள், நிலக்கரி இல்லாத காரணத்தால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் வேளையில் அந்நாட்டு அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதனால் பாகிஸ்தான் நாட்டு மக்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் அரசு சில மாதங்களுக்கு முன்பு இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டீ அளவை குறைத்து அன்னிய செலாவணி கையிருப்பைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் டீ குடிப்பதைக் குறைத்துக் கொண்டு லஸ்ஸி போன்ற இதர உள்நாட்டுப் பானங்களைக் குடிக்க வலியுறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இதேபோன்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மின்சாரத் தட்டுப்பாடு
பாகிஸ்தான் நாட்டில் உருவாகியுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காக மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மின்சாரச் சேமிப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் அனைத்து மால், மாக்கெட், கடைகளும் இரவு 8.30 மணிக்குள் மூடிவிட வேண்டும் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்னிய செலாவணி கையிருப்பு
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, மேலும் அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் அளவில் தான் உள்ளது.
எனர்ஜி இறக்குமதி
இந்த அன்னிய செலாவணி கையிருப்பில் பெரும் தொகை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்குப் போக உள்ளது. மேலும் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவி காலதாமதமாகியிருக்கும் காரணத்தால் கூடுதல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது பாகிஸ்தான் அரசு.
பாதுகாப்புத் துறை அமைச்சர்
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் Khawaja Asif வெளியிட்டு உள்ள மின்சாரச் சேமிப்புத் திட்டம் மூலம் சுமார் 62 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் சேமிக்க முடியும், இத்திட்டத்திற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமண மண்டபங்கள்
இந்த மின்சாரச் சேமிப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் அனைத்து மால், மாக்கெட், கடைகளும் இரவு 8.30 மணிக்குள் மூடுவது மட்டும் அல்லாமல் திருமண மண்டபங்களை 10 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப்
மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து அரசு அமைப்புகள், துறைகள் மின்சாரப் பயன்பாட்டை உடனடியாக 30 சதவீதம் குறைக்க வேண்டும் எனக் கூடுதலாக உத்தரவிட்டு உள்ளார்.
டிசம்பர் பணவீக்கம்
இதற்கிடையில் பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாதம் 23.8 சதவீதமாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 12.28 சதவீதமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications