பாகிஸ்தான்: ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கான நல திட்ட பணிகளுக்கும் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பவை மக்கள் செலுத்தக் கூடிய வரிகள்.
ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மக்களை வருமான வரி தாக்கல் செய்ய வைக்கவே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் அந்நாட்டு அரசுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதனை சரி செய்ய பாகிஸ்தான் அரசு புது யுக்தியை கையிலெடுத்துள்ளது.

பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியுனில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பாகிஸ்தான் அரசு சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நபர்களின் சிம் கார்டுகளை முடக்கி வருவது தெரிய வந்துள்ளது.
இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாத 3,500 நபர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் மக்களை 2023 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வைக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
பாகிஸ்தான் அரசின் வருவாய் வாரியம், 5,000 பேருக்கு எஸ்எம்எஸ் வழியாகவும் எச்சரிக்கை வழங்கியுள்ளதாம். அதாவது "உங்களது சிம் கார்டை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் முறைப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்" என்று எச்சரிக்கை தகவலை அனுப்பி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தானில் செயல்பட்டு வரக்கூடிய டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கூட்டத்தை நடத்தி அந்நாட்டு வருவாய் வாரியத்திற்கு இதுவரை எத்தனை பேரின் சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
சரியான முறையில் வரி செலுத்தாதவர்களுக்கு அவர்களது மொபைல் பேலன்ஸிலிருந்து பணம் குறைத்துக் கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவரது மொபைல் பேலன்ஸ் 100 பாகிஸ்தான் ரூபாயாக இருக்கிறது என்றால் அதில் 90 பாகிஸ்தான் ரூபாய் தானாகவே கழிக்கப்படும் என்றும் இது நேரடியாக வருவாய் வாரியத்துக்கு சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இதுபோல வருமான வரி தாக்கல் செய்யாததால் சிம்கார்டு முடக்கம் செய்யப்பட்டவர்கள் புதிதாக சிம்கார்டு வாங்குவதற்கு 90% கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்யும் பட்சத்தில் அவர்களது சிம்கார்டுகள் தானாகவே செயல்பாட்டுக்கு திரும்பும் என அந்நாட்டு வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வரையில் பாகிஸ்தானில் சுமார் 42 லட்சம் பேர் தங்களது வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சமாக இருந்துள்ளது. மக்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் வரி தாக்கலை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு முன்னெடுத்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டிருக்கும் பாகிஸ்தான், அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.இதனால் அங்கே உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications