பாகிஸ்தான் அரசு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற திட்டத்துடன் அந்நாட்டின்
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவதை தடுக்கும் முயற்சியாக பண்டமாற்று வர்த்தகத்தை கையில் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசு பெட்ரோலியம், எல்என்ஜி, நிலக்கரி, கோதுமை, பருப்பு வகைகள், கனிமங்கள், உலோகங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 38 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இதேபோல் சென்சிடிவ் விலைக் குறியீடு (எஸ்பிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 48 சதவீதமாக உயர்ந்திருந்த நேரத்திலும் பாகிஸ்தான் ரூபாய் நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ள வேளையில் அந்நாட்டு அரசு பண்டமாற்று வர்த்தகத்தை கையில் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை காப்பாற்றும் வரையில் IMF அமைப்பிடம் 6.7 பில்லியன் டாலர் அளவிலான கடன் திட்டத்தை அடைய பல கண்டிஷன்களை வைத்துள்ளது. இதை பாகிஸ்தான் அரசால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் ஐஎம்எப் கடன் உதவி அந்நாட்டுக்கு வருவது சந்தேகமாக உள்ளது.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு அண்டை நாடுகளுடன் செய்யும் வர்த்தகத்திற்கு பண்டமாற்று வர்த்தகத்தை அனுமதிக்க முடிவெடுத்தது. நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் இது தற்காலிகமான முடிவாக தான் இருக்கும், இதை வைத்து நீண்ட காலம் பாகிஸ்தானால் பொருளாதாரத்தை நதர்த்த முடியாது.
பண்டமாற்று வர்த்தகம் மூலம் பாகிஸ்தான் ஈரான், ரஷ்யா உடன் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும், சர்வதேச நாடுகளின் வர்த்தக தடையால் இந்த நாடுகளுக்கு எவ்விதமான பண பரிமாற்றத்தையும் செய்ய முடியாது, ஆனால் பண்டமாற்று வர்த்தகம் மூலம் இதை சரி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications