பாகிஸ்தான் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் அடிப்படை சேவைகள் கூட முழுமையாகப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடம் புதிய நிதியுதவிக்காக முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஐபிஎம்-யிடம் நிதியுதவி பெற முடிவு செய்து 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் திட்டத்திற்காக IMF உடனான ஒப்பந்தத்தைச் செய்யப் பாகிஸ்தான் அரசு முக்கியமான ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஐபிஎம்-யிடம் கடன் பெற வேண்டும் என்றால் வருவாய் மற்றும் நிதி நிலையை மேம்படுத்த நம்பிக்கை அளிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக 7 பில்லியன் டாலர் கடன் பெற பாகிஸ்தான் அரசு 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க உள்ளது. இந்த அறிவிப்புப் பாகிஸ்தான் மக்கள் பெரிய அளவில் பாதித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசு.
நிதியமைச்சர் இஷாக் தார்
பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார், 7 பில்லியன் டாலர் அளவிலான கடன் திட்டத்தை முடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து IMF அமைப்பிடம் இருந்து ஒரு ஒப்பந்த அறிக்கை பெற்றுள்ளதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
இந்த நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான நிதியுதவியைப் பெற இரு தரப்பும் ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை இன்னும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அந்நியச் செலாவணி
பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்துள்ளது, பொருளாதாரச் சரிவில் இருந்து அதைத் தடுக்கவே தற்போது ஐஎம்எப் குழு பரிந்துரைப் படி 170 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை விதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்க உள்ளது பாகிஸ்தான் அரசு.
17 நாள் இறக்குமதி
பிப்ரவரி 3 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 2.916 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது. இந்தத் தொகை 16 அல்லது 17 நாளுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஐஎம்எப் கடன் திட்டம்
இந்த நிலையில் அடுத்தச் சில நாட்களில் ஐஎம்எப் கடன் திட்டத்தை ஒப்புதல் அளித்தால் தான் நிதியுதவி கிடைக்கும். பாகிஸ்தானுக்கு 2019ல் 6 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அறிவித்தது, தற்போது இத்திட்டத்தை 7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஐஎம்எப் அதிகாரிகள்
ஐஎம்எப் அதிகாரிகள் சுமார் 10 நாள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வியாழன் இரவு பாகிஸ்தானை விட்டு அமெரிக்கச் சென்ற நிலையில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்தும் விர்ச்சுவல் முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி
நேதன் போர்ட்டர் தலைமையிலான IMF அதிகாரிகள் குழு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்து அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்தது. IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) கீழ் விவாதங்களை நடத்துகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications