இந்தியா பாகிஸ்தான இடையிலான மோதலின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவை சேர்ந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மகாராஷ்டிரா சைபர் தளம் 7 குழுக்கள் மூலம் பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்தியாவின் பல்வேறு இணையதளங்களை நோக்கி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என கூறி இருக்கிறது. இந்த 15 லட்சம் சைபர் தாக்குதலில் 150 தாக்குதல்கள் அவர்களுக்கு வெற்றிகரமாக அமைந்ததாகவும் மற்ற அனைத்தும் தோல்வியுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவை சேர்ந்த 15 லட்சத்திற்கும் அதிகமான இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் வெற்றி விகிதம் 0.01% தான் என்றும் தோல்வி அடைந்த விகிதம் 99 .99% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சைபர் காவல்துறையின் கூடுதல் டிஜிபி யஷாஸ்வி யாதவ், வெளியிட்டுள்ள தகவலில் வங்கதேசம், பாகிஸ்தான் ,மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் ஹேக்கர்கள் குழுவினரே இந்தியாவை சேர்ந்த இணையதளங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி இருக்கின்றன என கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதும், பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் குழு இந்திய இணையதளங்கள் மீது தாக்குதலை தொடர்ந்தன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து அரசுக்கு சொந்தமான இணையதளங்களையே பெருமளவில் இவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். malware campaigns, Distributed Denial-of-Service (DDoS) attacks, GPS spoofing ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் தான் இவர்கள் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மிகச்சிறந்த டிஜிட்டல் கட்டமைப்பையும் பாதுகாப்பையும் கொண்டிருப்பதே இந்த பாகிஸ்தான் தாக்குதல்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான குழுக்கள் சமூக வலைத்தளங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் போலியான தகவல்களை பரப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய வங்கி அமைப்பு சீர்குலைந்து விட்டது, விமான நிலைய தரவுகள் எங்கள் வசம் இருக்கின்றன என்பன உள்ளிட்ட தகவல்கள் பெருமளவில் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல், பல்வேறு மாநிலங்களிலும் மின்சாரம் நிறுத்தம், பிரம்மோஸ் சேவுகணை இருக்கக்கூடிய பகுதியில் சைபர் தாக்குதல் என்பன உள்ளிட்டவற்றை போலியாக பாகிஸ்தானை சேர்ந்த குழுவினர் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதாக மகாராஷ்டிரா சைபர் பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் தொடர்பாக 5,000 போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
APT 36 (Pakistan), Pakistan Cyber Force, Team Insane PK, Mysterious Bangladesh, Indo Hacks Sec, Cyber Group HOAX 1337,National Cyber Crew (Pakistan-allied) இந்த ஏழு குழுவினர் தான் இந்த சைபர் தாக்குதலை அரங்கேற்றினர் என தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications