பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடிக்கு மத்தியில் வல்லரசு நாடுகள் தடுமாறி வரும் வேளையில், பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒருபக்கம் ஐஎம்எப் கடன் இன்னும் பாகிஸ்தான் அரசுக்கு வந்து சேராமல் இருக்கும் வேளையில் பாகிஸ்தான் அரசுக்கு அடுத்த பிரச்சனை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தில் மட்டும் இதுவரையில் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் 77.5 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். வெறும் 6.5 பில்லியன் டாலர் கடனுக்காக ஐஎம்எப் அமைப்பிடம் கெஞ்சி வரும் பாகிஸ்தான் அடுத்த 3 வருடத்தில் எப்படி 77.5 பில்லியன் டாலர் என்ற மாபெரும் தொகையை திருப்பி செலுத்தும் என்பது தான் தற்போது உலக நாடுகளின் முக்கிய கேள்வி.

அமெரிக்க பசுமை அமைப்பு செய்த ஆய்வின் படி பாகிஸ்தான் நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம், அரசியல் பிரச்சனைகள், அதிகரித்து வரும் உள்நாட்டு தீவிரவாதம், ஆகியவற்றுக்கு மத்தியில் தலைக்கு மேல் இருக்கும் வெளிநாட்டு கடன் ஆகியவை பாகிஸ்தான் பொருளாதாரத்தை சீர்குலைத்திவிடும் என எச்சரித்து அறிக்கை வெயிட்டு உள்ளது.
இதில் முக்கியமாக ஜூன் மாதம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனாவின் SAFE டெபாசிட் மற்றும் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன வர்த்தக கடன் ஆகியவை முதிர்ச்சி அடைகிறது. இதை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரசு, சீனா அரசு வழக்கம் போல் இக்கடனையும் ஒத்திவைக்கும் என நம்புகிறது.
ஆனால் சீன அரசின் நிதிநிலை மோசமாகவும், பல துறைகள் சீனாவில் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் இக்கடன் தவணையை திருப்பி செலுத்தவும் உத்தரவிடலாம். சீனாவின் கடன் வலை விவகாரம் அனைவருக்கும் தெரியும், பாகிஸ்தான் நாட்டின் மொத்த கடனில் சீனா அரசும், சீன வங்கிகளும் கொடுக்க கடன் மிகவும் அதிகம்.

சீன அரசு தனது நிதி நெருக்கடி பிரச்சனையை சமாளிக்க கடன் திருப்பி செலுத்த உத்தரவிட்டால் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். மேலும் பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தில் செலுத்த வேண்டிய 77.5 பில்லியன் டாலர் தொகையில் பெரும் தொகையை சீனா மற்றும் சவுதி அரேபியாவுக்கு செலுத்த வேண்டும்.
ஐஎம்எப் அமைப்பு 2019ல் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6.5 பில்லியன் டாலர் நிதியுதவி திட்டம் ஜூன் 30, 2023 ல் முடிவடைகிறது. இத்திட்டம் இக்குறித்த நாளுக்கு பின்பு நீட்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது, இதனால் பாகிஸ்தான் அரசு இக்கடன் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திகொள்ள அனைத்து விதிமான நிபந்தனைகளையும் ஏற்று செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications