இந்திய அரசு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஏப்ரல் 23, 2025 அன்று ரத்து செய்வதாக அறிவித்தது. இது பாகிஸ்தான் நாட்டின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்தாலும், வெறும் 2 மாத காலத்தில் மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டின் விவசாயம், மின்சார உற்பத்தி, மற்றும் குடிநீர் விநியோகம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ள வேளையில் இந்த தண்ணீர் பற்றாக்குறை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப், சிந்து, மற்றும் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணங்களில் நதி நீர் ஓட்டம் கடந்த ஆண்டை விட 20% குறைந்துள்ளது, என சிஎன்என்-நியூஸ்18 ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து ஜூன் 20, 2025 நிலவரப்படி பார்க்கையில்..
பஞ்சாப்: 1,10,500 cusecs (கடந்த ஆண்டு: 1,30,800 cusecs).
சிந்து: 1,33,000 cusecs (கடந்த ஆண்டு: 1,70,000 cusecs).
கைபர் பக்துன்க்வா: 2,600 cusecs (கடந்த ஆண்டு: 2,900 cusecs).
இந்த நீர் ஓட்டத்தின் சரிவு பாகிஸ்தான் நாட்டின் கரீஃப் அறுவடை காலத்தில் 21% நீர் பற்றாக்குறை உருவாக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இது விவசாய உற்பத்தி, மின்சார உற்பத்தி, மற்றும் குடிநீர் விநியோகத்தை கடுமையாக பாதிக்கும் என்பதையும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் நீர் வள செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு இதுவரையில் நான்கு முறை கடிதம் எழுதி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த 4 கடிதங்களில் மூன்று கடிதங்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் எழுதப்பட்டவை. பாகிஸ்தான், இந்தியா நீரை திசை திருப்பினால் அதை "போர் செயலாக" கருதப்படும் என எச்சரித்துள்ளது. ஆனாலும் இந்தியா தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது. சிந்து நிதிநீர் ஒப்பந்தத்தின் தடை பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் 24% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விவசாயத்தைச் சார்ந்துள்ளது, இதில் 80% நிலங்கள் சிந்து நதி நீர் பாசனத்தை நம்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்நாடின் விவசாயம் மற்றும் உணவு விநியோகத்தை பாதிக்கும். இதேபோல் சிந்து நதிநீர் சார்ந்த மின்சார உற்பத்தி குறையும், இதனால் மின்சார தட்டுப்பாடும் உருவாகும்.
இந்தியாவின் சிந்து நிதிநீர் குறித்த முடிவு, பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மையை மேலும் மோசமாக்கியுள்ளது. இது அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications