2023 ஆம் ஆண்டை உலக நாடுகள் பெரும் அச்சத்துடன் துவங்கியிருக்கும் நிலையில், எந்த நாடு எப்போது ரெசிஷன் அறிவிக்கும் என அச்சத்தில் இருக்கும் வேளையில் பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் நுகர்வோர் பணவீக்க குறியீடு டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இதன் அளவு 12.28 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலை கடந்த 2 வருடமாக மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் அடிப்படைத் தேவைக்குக் கூடப் பணம் இல்லாமல் மாட்டிக்கொண்டு தவித்த வேளையில் ஐஎம்எப், சீனா, சவுதி அரேபியா அதிகளவிலான கடனை அளித்தது.
நிதியுதவி
ஆனால் நிதியுதவி பெற்ற கையோடு பாகிஸ்தான் நாட்டில் உருவான வெள்ள பாதிப்பு அந்நாட்டைப் பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்தியது. இதனால் பெரும்பாடுபட்டு வாங்கிய நிதியுதவிகள் அனைத்தும் மாயமானது.
டிசம்பர் பணவீக்கம்
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வந்ததால் விரைவில் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது நவம்பர் மாதம் 23.8 சதவீதமாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 12.28 சதவீதமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சகம்
ஆனால் டிசம்பர் மாதம் மாதாந்திர வளர்ச்சி அளவு 0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது நவம்பர் மாதம் 0.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் ஏற்கனவே டிசம்பர் மாதம் பணவீக்கம் 23 - 25 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணித்திருந்தது.


Click it and Unblock the Notifications