இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் பெற பல நிபந்தனைகளை விதித்தது. இதில் பெரும்பாலான விதிமுறைகள் அரசின் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான், பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே வருமானம் இல்லாமல், அதிகப்படியான விலைவாசி காரணமாக தவித்து வருகின்றனர்.
ஆயினும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து 3 பில்லியன் டாலர் கடன் பெற வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் அரசு எரிபொருள் மீதான வரியை உயர்த்தியது. இது மட்டும் அல்லாமல் பல்வேறு சேவைகளில் கட்டுப்பாடுகளை விதித்து, அரசின் செலவுகளும் பல வகையில் குறைக்கப்பட்டது. கடந்த 4 மாதம் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் முதல் முறையாக தற்போது பணவீக்கம் அதிகமாகியுள்ளது.

பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நுகர்வோர் விலை குறியீடு செப்டம்பர் மாதத்தில் 31.44 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் சராசரி மதிப்பீட்டை விட 30.95% அளவீட்டை விட அதிகமாகவும், மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 27.4% அளவீட்டை விடவும் அதிகமாகும்.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் அக்டோபர் 30 ஆம் தேதி பணவீக்கத்தை குறைக்க அந்நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து 3 மாதமாக பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் ஜூன் மாத கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் வட்டி விகிதம் உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பணவீக்க உயர்வுக்கு முக்கியமான காரணம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை தான், சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது தற்போது பெரிய அளவில் பாதிக்க துவங்கியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் நாட்டில் செப்டம்பர் மாதம் கடந்த வருடத்தை காட்டிலும் போக்குவரத்து செலவுகள் 31.26 சதவீதம் அதிகரித்துள்ளது, உணவு பொருட்களின் விலை 33.11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோடு வீடு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றின் விலையும் 29.70 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்பிஜி விலை ஒரு கிலோவுக்கு 20.86 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில், சிலிண்டர் விலை 246.16 ரூபாய் அதிகரித்து 3079.64 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications