ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நாளில் இருந்து பாகிஸ்தானுக்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது, குறிப்பாக கடந்த ஒரு வருடமாக ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் தரைப்படை கொண்டு பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நேற்று இரவு துவங்கி இன்று காலை வரை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொண்டதாக அந்நட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் அத்தாவுல்லா தாரர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜார் மாவட்டத்தில், பாகிஸ்தான் படைகள் தரைவழியாக சென்று தாக்குதலை மேற்கொண்டனர். இந்த திடீர் தாக்குதல் மூலம் ஆப்கான் நாட்டை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் மூலம், ஆப்கான் பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு உள்ளது.
பாக்டியா, பாக்டிகா, குனார் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்டியா, பாக்டிகா மற்றும் குனார் ஆகிய எல்லைப்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஜமாத் உல் அஹ்ரார் மற்றும் ஃபித்னா அல் குவாரிஜ் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அத்தாவுல்லா தாரர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் வாயிலாக ஆப்கான் பயங்கரவாதிகளின் முகாம்களில் பெரிய அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் திடீர் தாக்குதலின் பின்னணி
கடந்த சனிக்கிழமை இரவு, பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ஒரு முகாமின் மீது ஆப்கான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த தாக்குதலை பாகிஸ்தான் படைகள் முறியடித்ததில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே, ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் களத்தில் இறங்கி இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் தீவிரமாக இருக்கும் பாகிஸ்தான், ஆப்கான் நாட்டின் பயங்கரவாதிகளை மொத்தமாக கூண்டோடு தூக்கியுள்ளது. இதேபோல் தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் மத்தியில் பல முறை சமரசம் பேசப்பட்டும் அமைதி திரும்பாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications

