பாகிஸ்தான் அரசு ஆப்பிள் நிறுவனத்தை தங்கள் நாட்டில் ஐபோன் உற்பத்தி தொடங்க அழைத்துள்ளது. இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறை தற்போது மிகப்பெரிய உற்பத்தி வர்த்தகமாக மாறியது மட்டும் அல்லாமல் பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக மாறியுள்ளது. இதை உணர்ந்த பாகிஸ்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு சில சலுகைகளை வழங்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரையில் எந்த நாட்டிலும் உடனடியாக முழு உற்பத்தி தொடங்காது, முதலில் பழைய ஐபோன்களை பழுதுபார்த்து ஏற்றுமதி செய்வதில் இருந்து தொடங்கும். இதே உத்தியை பாகிஸ்தான் நாட்டிலும் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பழுதுபார்ப்பில் இருந்து உற்பத்திக்கு மாறியது.

பாகிஸ்தான் வழங்கும் சலுகைகள்
ஆப்பிளுக்கு தொழிற்சாலை அமைக்க மலிவான நிலம் வழங்குவதாகவும், உற்பத்தி அல்லது ஏற்றுமதியைப் பொறுத்து 8% செயல்திறன் அடிப்படையிலான சலுகை (performance incentive) கொடுக்கப்பதாகவும், 2-3 ஆண்டுகள் பழமையான ஐபோன்களை பாகிஸ்தானில் பழுதுபார்த்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பழைய ஐபோன்களின் ஏற்றுமதி வர்த்தகம் முதல் ஆண்டில் 100 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டும் என்று பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் ஐபோன் சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் 6%லிருந்து 8%க்கு உயர்த்தப்படும் எனவும் அடுக்கடுக்கான அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
சீனா உதவி
இந்த திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் சீன நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. இதன் வாயிலாக சீன நிறுவனங்களிடமிருந்து 557 மில்லியன் டாலர் அளவிலான முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது பாகிஸ்தான்.
ஆப்பிளின் திட்டம்
ஆப்பிள் உடனடியாக ஐபோன் உற்பத்தி தொடங்காது. முதலில் பழைய ஐபோன்களை பழுதுபார்த்து (refurbish) ஏற்றுமதி செய்வது, ஊழியர்களை பயிற்றுவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியாவில் ஆப்பிள் பின்பற்றிய உத்தி. அங்கு பழுதுபார்ப்பில் இருந்து படிப்படியாக உற்பத்திக்கு மாறியது. பாகிஸ்தானும் இதே போக்கை எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானின் கனவு
பாகிஸ்தான் தன்னை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்க, இறக்குமதியை குறைக்க இந்த முயற்சி பெரிய அளவில் பலன் தரும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications