இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்.. கைகளை வெட்டிவிடுவோம்!

பாகிஸ்தான் மக்களின் நீர் ஆதாரம், விவசாயம், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம்பியிருக்கும் வேளையில், இந்தியாவின் நிலைப்பாடு அந்நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பருவநிலை மாற்ற அமைச்சராக இருக்கும் முசாதிக் மாலிக் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2025ல் பஹல்காம்-ல் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்களும் இறந்தனர். இதையடுத்த பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு தீவிரமாக எடுக்க துவங்கியது. இதன் ஒரு பகுதியாக 1960ல் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது என மொத்தமாக முடக்கியது.

இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்.. கைகளை வெட்டிவிடுவோம்!

இந்த ஒரு ஒப்பந்தம் முடக்கியதால் பாகிஸ்தான் நாடுக்கான நீர் ஆதாரம் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த முசாதிக் மாலிக், இந்தியா பாகிஸ்தான் நாடிற்கான நீர் ஆதாரணத்தை முடக்கி வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கான தண்ணீரை முடக்கினால் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம் என ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர் பேசுகையில் இந்திய நாட்டின் பிரதமர் பாகிஸ்தானுக்கான தண்ணீரை கட்டுப்படுத்தி வருகிறார், மேலும் அவர் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுக்கூட தண்ணீர் அளிக்க முடியாது என கூறுகிறார் என முசாதிக் மாலிக் பேசினார். ஏற்கனவே நான் கூறியது போல் யாரேனும் பாகிஸ்தானுக்கான தண்ணீரை முடக்கினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்ககூடும் என அறிவித்தேன் எனவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் சுமார் 40-50 சதவீத மக்கள் தங்களுடைய விவசாயத்திற்காக இந்த தண்ணீரை தான் நம்பியுள்ளனர். யாரோ ஒருவர் நாட்டின் உணவு பாதுகாப்பையும், 50 சதவீத வேலைவாய்ப்புகளையும், 25 சதவீத பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றனர் என முசாதிக் மாலிக் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் முசாதிக் மாலிக், சிந்து நதி நீர் ஒப்பந்த முடக்கத்தில் நீதியின் கேள்வியும் உள்ளது. பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மக்கள் நலனையும் நாங்கள் பாதுகாப்போம். யாராவது எங்கள் நீர் பங்கில் கை வைத்தால், அந்தக் கையை வெட்டுவோம் என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம் என்று முசாதிக் மாலிக் கூறியுள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம் உயர்மட்டத்தில் இருக்கும் பகுதிகள் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் நீர் ஆதாரத்தை கட்டுப்படுத்தும் உரிமை பெறுவதாக உள்ளது. அப்படியானால் உலகின் அனைத்து மேல் நிலை பகுதிகளும் இத்தகைய அதிகாரத்தை பெற வேண்டும். இதற்கு உலகளவில் தீர்வு காணப்பட வேண்டும் என முசாதிக் மாலிக் பேசினார். இதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்திற்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+