பாகிஸ்தான் பொருளாதாரம் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கும் வேளையில், அந்நாட்டின் பொருளாதாரத்தை திவால் ஆகாமல் காப்பாற்றும் நோக்கில் ஐஎம்எப் அமைப்பிடம் சுமார் 6.5 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெற ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்த கடனை பெறுவதற்கு பல கட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் முதல்கட்டமாக 170 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான வரி வசூல் திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நடைமுறைப்படுத்திய நிலையில் இன்று அரசு தரப்பிலும், அரசு அதிகாரிகளும் சம்பள உயர்வை நிறுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஐஎம்எப் அமைப்பு பாகிஸ்தானுக்கு அளிப்பதாக அறிவித்துள்ள 6.5 பில்லியன் டாலர் அளவிலான கடனில் முதல் தொகுப்பான 1.1 பில்லியன் டாலரை தொகையை பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் இன்று பாகிஸ்தான் அரசு செலவுகளை குறைக்கும் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மோசமான நிலையை எட்டியும், எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தையும், உணவு பொருட்கள் விலை குறைந்த காலக்கட்டத்தில் அதிகப்படியான உயர்வை எட்டிய காரணத்தால் அந்நாட்டு மக்கள் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதன் தாக்கத்தை உணர உள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்திய அமைச்சரவையுடன் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் புதிய பண சேமிப்பு நடவடிக்கைகளை அறிவித்தார்.
ஆடம்பர பொருட்கள், ஆடம்பர கார்
ஜூன் 2024 வரை, அரசு தரப்பில் இருந்து ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கும், அனைத்து வகையான புதிய கார்களை வாங்குவதற்கும் முழுத் தடை நடைமுறையில் இருக்கும்.
அலுவலகம் திறப்பு
எரிவாயு மற்றும் மின்சாரத்தை சேமிக்க, கோடை காலத்தில் அலுவலகங்கள் காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். அரசு நிகழ்ச்சிகளில் ஒரு உணவு மட்டுமே அனுமதிக்கப்படும்.
சம்பளம் மற்றும் சலுகைகள் ரத்து
அமைச்சர்கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்கள் தங்களது சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஷெரீப் அறிவித்தார். அனைத்து அமைச்சர்களுக்கும் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு கட்டணங்களை அரசு செலுத்தாது, அவர்கள் சொந்தமாக செலுத்த வேண்டும்.
சொகுசு கார்கள் பரிமுதல்
அமைச்சரவை உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களும் ரத்து செய்யப்பட்டு ஏலம் விடப்படும். மத்திய அமைச்சர்கள் உள்நாட்டுப் பயணம் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது முதல் வகுப்பு, பிஸ்னஸ் கிளாஸ்-ல் பயணம் செய்யமல் எக்னாமி பிரிவில் பயணம் செய்வார்கள்.
அரசு பயணங்கள்
உதவி ஊழியர்கள் இனி அரசு பயணங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அமைச்சரவை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களின் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க மாட்டார்கள்.
பாதுகாப்பு கார்கள் ரத்து
அரசு அதிகாரிகளுக்கு இனி பாதுகாப்பு கார்கள் வழங்கப்படாது.
பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக டெலி கான்ஃபரன்சிங் ஊக்குவிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, புதிய நிர்வாக அலகு, பிரிவு அல்லது துணைப்பிரிவு உருவாக்கப்படாது.
உணவு பழக்கம்
இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து அமைச்சகங்களிலும், பிரதமர் மாளிகையிலும், மத்திய அமைச்சரவையிலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இருக்கும். தேநீர் நேரம் என்றால், தேநீர் மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும் என்று பாகிஸதான் பிரதமர் கூறினார்.
செலவு அளவீடுகள்
அமைச்சகங்கள், அரசு துறைகள் மற்றும் துணைத் துறைகளின் தற்போதைய செலவு அளவீடுகளில் 15% குறைக்கப்படும் என்று பிரதமர் ஷெரீப் கூறினார். ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு வீடுகள் டவுன்ஹவுஸாக மாற்றப்படும்.
300 டாலர் கிப்ட் பொருட்கள்
300 டாலருக்கு மேல் மதிப்புள்ள அரசு பரிசுகளை வைத்திருக்க எந்த அதிகாரியும் அல்லது அமைச்சரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து அமைச்சகளையும் இணைக்கும் வகையில் ஒற்றை கருவூல கணக்கு நிறுவப்படும்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் போது கூடுதல் செலவு குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications