பொருளாதாரச் சரிவு, நாணய மதிப்பில் சரிவு, நிர்வாகப் பிரச்சனை, நிதி நெருக்கடி எனப் பல பிரச்சனைகளில் தவித்து வரும் பாகிஸ்தான் அரசு இலங்கை-க்கு டிபென்ஸ் மற்றும் செக்யூரிட்டி துறையை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க உள்ளது.
கொரோனா பாதிப்பு மூலம் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதாகக் கூறப்படும் இந்தச் சூழ்நிலையில், இந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு 2 நாள் சுற்றுப்பயணத்தில் 50 மில்லியன் டாலருக்கான கடன் உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படவும், இரு நாட்கள் மத்தியிலான பாதுகாப்புத் தன்மை குறித்த பேச்சுவார்த்தையை மேம்படுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தாண்டி இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் இலங்கை மத்தியிலான சுற்றுலா, விவசாயம், மற்று வர்த்தகக் கூட்டணி ஆகியவற்றைக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்பு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை நாட்டின் குடியரசுத் தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் தான்.


Click it and Unblock the Notifications