உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றுக்கு பின் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்பில் சிக்கிய நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் கொரோனாவுக்கு முன்பே மோசமான நிலையில் தான் உள்ளது.
IMF அமைப்பின் கடனுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டில் கடந்த நிதியாண்டில் வறுமை கோட்டின் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 12.5 மில்லியன் மக்கள் மோசமான பொருளாதார நிலைக்கு விழுந்துள்ளனர் என்று உலக வங்கி கூறியுள்ளது.

மேலும் உலக வங்கி நிதி நெருக்கடியால் மாட்டிக்கொண்டு உள்ள பாகிஸ்தான் நாட்டில் மக்களின் நிதி ஸ்திரதன்மையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு பக்கம் நிதி நெருக்கடியாலும், மறுபுறம் அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாகவும் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அந்நாட்டில் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் அனைத்து பொருளாதார மற்றும் வர்த்தக துறைக்கு தொடர்புடையவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை குறிப்புகளை வாஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டது என தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் வறுமை அளவு கடந்த ஒரு வருடத்தில் 34.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 12.5 மில்லியன் மக்கள் அதாவது 1.25 கோடி மக்கள் கடந்த வருடத்தில் மட்டும் நாளுக்கு 3.65 டாலர் கூட சம்பாதிக்க முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் வாயிலாக தற்போது 9.5 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

பாகிஸ்தான் பொருளாதாரம் கட்டமைப்பு அந்நாட்டின் வறுமையை ஒழிக்கும் திறன் கொண்டதாக இல்லை, இதேபோல் சக நாடுகளுக்கு இணையாக வாழ்வியல்-ஐ மேம்படுத்தும் போக்கை கொண்டிருக்கவில்லை என பாகிஸ்தான் நாட்டுக்கான உலக வங்கியின் மூத்த பொருளாதார வல்லுனர் Tobias Haque தெரிவித்துள்ளார்.
உலக வங்கி பாகிஸ்தான் அரசை விவசாயம், ரியல் எஸ்டேட் போன்ற துறையில் வரியை அதிகரிக்கவும், அரசின் செலவுகளை அதிகரிக்கவும் இதன் வாயிலாக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இது பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் சுமையை உருவாக்கும் என்பதால் அந்நாட்டின் முடிவு மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications