மத்திய கிழக்கு நாடுகளில் உருவான போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதன்மையான நாடாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே பெரும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்த எரிபொருள் விலை உயர்வு மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை கொடுத்துள்ளது. இதனாலேயே ஈரான் போர் முடிவுக்கு கொண்டு வர என்னவெல்லாம் செய்ய முடியுமோ பாகிஸ்தான் செய்து வருகிறது.

பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவைகளின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்என்ஜி போன்றவற்றில் வெளிநாட்டு சார்பு அதிகமாக இருப்பதால், ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட விநியோக சிக்கல்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளன. உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததுடன், இறக்குமதி செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.
இந்த சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு நாணயச் செலவினத்தை குறைக்கவும் பாகிஸ்தான் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நிதி சுமையை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்துள்ள நிலையில் புதிதாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வர ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட் லாக்டவுன்
இந்த நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு ஸ்மார்ட் லாக்டவுன் என்ற கட்டுப்பாட்டு முறையை பரிசீலித்து வருவதாத தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனா காலத்தில் நடைமுறைக்கு வந்த முழுமையான லாக்டவுன் போல அல்லமல் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்தும் அணுகுமுறை என தெரிகிறது.
இந்த ஸ்மார்ட் லாக்டவுன் முறையின் மூலம், நாட்டின் முழுமையான பொருளாதார செயல்பாடுகளை முடக்காமல், எரிபொருள் சேமிப்பை மேம்படுத்தும் நோக்கமாக உள்ளது. இதனால், தொழில்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தை உறுதி செய்யும் முன், பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் அசிஃப் அலி சர்தாரி தலைமையிலான நிர்வாகம், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், ராணுவத் தலைமை மற்றும் மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல்வேறு எரிபொருள் சேமிபு்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு அலுவலகங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை (Work From Home), பள்ளிகள் தற்காலிகமாக மூடல், அரசு நிகழ்ச்சிகள் குறைப்பு போன்றவை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications