பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் பாகிஸ்தான் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இதேவேளையில் புதிய நிதியை திரட்டும் வாய்ப்புகளை மிஸ் செய்துவிட கூடாது என்பதில் தீவிரவமாக உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்ய போர் துவங்கிய நாளில் இருந்து பாகிஸ்தான் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வதாக கூறப்படும் காரணத்தால் தான் பாகிஸ்தான் ரஷ்யாவிடம் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் கேட்ட போது தர முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டத்து.
உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனுக்கு G7 நாடுகள் பெரிய அளவில் ஆதாரவு அளித்து வரும் வேளையில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவாகவும், இந்தியா எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - சீனாவுக்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் உக்ரைன்-க்கு போரில் பயன்படுத்தும் டேங்கர்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கட்டாயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான்
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதியுதவியை பெறுவதற்காக பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் 44 T-80UD ரக மெயின் battle tank-களை ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ டேங்க்
பாகிஸ்தான் தனது ராணுவ டேங்க்-களை உக்ரைனுக்கு அளித்தால் கட்டாயம் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ள காரணத்தால் பாகிஸ்தான் இதை செய்ய முடிவு செய்துள்ளது.
நிதியுதவி
பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவிலான நிதியுதவியை அளித்தாலும் போதுமானதாக இல்லை, ஐஎம்எப் கடன் தொடர்ந்து தாமதம் அடைந்து வரும் வேளையில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளின் உதவி செய்யாமல் இருப்பது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
44 T80UD டேங்குகள்
பாகிஸ்தான் நிதிநிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் வேளையில் அந்நாட்டு மக்களை காபற்றவும், நாட்டை திவாலாகமல் காப்பாற்றவும் பாகிஸ்தான் அரசுக்கு வேறு வழி இல்லாத காரணத்தால் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனுக்கு 44 T80UD டேங்குகளை அளிக்க உள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவத்தில் சுமார் 2,467 மெயின் பேட்டில் டேங்க் உள்ளது, இதில் T-80UD ரக டேங்க் என்பது சோவியத் காலத்தின் T-80 டேங்க்-ன் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். பாகிஸ்தான் - உக்ரைன் மத்தியில் ராணுவ மற்றும் தொழிற்துறை தொடர்புகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
உக்ரைன் - பாகிஸ்தான்
உக்ரைன் நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் சுமார் 320 உக்ரைன் T-80UD டேங்க்களை வாங்கியுள்ளது, இது மட்டும் அல்லாமல் 1991 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உக்ரைன் நாட்டிம் இருந்து சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் 2021ல் உக்ரைன் - பாகிஸ்தான் இணைந்து ஆயுதங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிட்டத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications