இந்தியாவை விட பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிகம்.. உண்மையான நிலவரம் என்ன..?!

பாகிஸ்தான் நாடு கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவிலான பின்னடைவைச் சந்தித்து வருவது தெரியும், இந்நிலையில் அரசுக்குக் கூடுதலான நிதி திரட்டும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் எரிபொருள் விலையைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளார்.

இன்று வெளியான அறிவிப்பின் படி பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஒரு லிட்டர் பெட்ரோல விலையை 5.40 ரூபாயும், ஹைய் ஸ்பீட் டீசல் விலை 2.54 ரூபாயும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் அரசின் அறிவித்துள்ள புதிய விலை அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 118.09 ரூபாய், டீசல் விலை 116.5 ரூபாய், மண்ணெண்ணெய் விலை 87.14 ரூபாய், லைப் டீசல் ஆயில் 84.67 ரூபாய் விலையில் அந்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தப் புதிய விலை உயர்வு குறித்துப் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் அரசியல் விவகார சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பிரதமர் இம்ரான் கான் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்த விலையை அறிவிக்காமல் பெரும் சுமையை மக்களுக்குக் குறைத்துள்ளார்.

 கட்டுப்பாட்டு ஆணையம்

கட்டுப்பாட்டு ஆணையம்

கடந்த சில மாதங்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 11.40 ரூபாய் உயர்த்த வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

 மக்கள் நலன்

மக்கள் நலன்

ஆனால் நாட்டின் மக்கள் நலன் கருதியும், பொருளாதார வளர்ச்சி, வர்த்தகச் சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரதமர் இம்ரான் கான் ஒரு லிட்டர் பெட்ரோல விலையை 5.40 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளார் என ஷாபாஸ் கில் விளக்கம் அளித்துள்ளார்.

 15 நாட்களில் 2வது விலை உயர்வு

15 நாட்களில் 2வது விலை உயர்வு

மேலும் பாகிஸ்தான் அரசு தனது நாட்டின் மக்களின் நலன் கருதி கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாட்களில் 2வது முறையாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஜூலை மாத துவக்கத்தில் 4.7 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச கச்சா எண்ணெய் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் விலை

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் 0.13 சதவீதம் அதிகரித்து 71.74 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 73.49 டாலருக்கும் குறைந்துள்ளது. ஆனால் OPEC கச்சா எண்ணெய் ஜூலை 6ஆம் தேதி 75.29 டாலரில் இருந்து 71.97 டாலருக்குச் சரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் 75.29 டாலருக்கு உயர்ந்துள்ளது.

 பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்


இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்

சென்னை : 102.23 ரூபாய்
டெல்லி : 101.54 ரூபாய்
கொல்கத்தா : 101.74 ரூபாய்
மும்பை : 107.54 ரூபாய்
பெங்களூர் : 104.94 ரூபாய்
ஹைதராபாத் : 105.52 ரூபாய்
கோழிக்கோடு : 101.95 ரூபாய்

 டீசல் விலை நிலவரம்

டீசல் விலை நிலவரம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்

சென்னை : 94.39 ரூபாய்
டெல்லி : 89.87 ரூபாய்
கொல்கத்தா : 92.02 ரூபாய்
மும்பை : 97.45 ரூபாய்
பெங்களூர் : 95.26 ரூபாய்
ஹைதராபாத் : 97.96 ரூபாய்
கோழிக்கோடு : 95.02 ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு

இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது பாகிஸ்தான் நாட்டின் 0.47 பைசாவிற்கு சமம். அப்படி பார்க்கும் போது பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படும் 118 ரூபாய் பெட்ரோல் விலை இந்தியாவில் வெறும் 55.42 ரூபாய் மட்டுமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+