பாகிஸ்தான் பிரதமர் புலம்பல்.. பங்களாதேஷ் பாருங்க எப்படியிருக்குன்னு.. எனக்கு வெட்கமா இருக்கு..!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், பெரும் அதிர்ச்சி செய்தியாக அந்நாட்டின் பணவீக்கம் கடந்த நிதியாண்டில் 29 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா 2 சதவீதத்திற்கும், இந்தியா 4 சதவீதத்திற்கும் கொண்டு வர போராடி வரும் வேளையில் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 29 சதவீதமாக உள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டில் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ஷெபாஸ் ஷெரீஃப், இந்த வாரம் 24ஆம் தேதி அந்நாட்டு தொழில்துறைத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் புலம்பல்.. பங்களாதேஷ் பாருங்க எப்படியிருக்குன்னு.. எனக்கு வெட்கமா இருக்கு..!!


இக்கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை மீட்டெடுப்பதற்கு இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தொழில்துறைத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த முக்கிய கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், வங்கதேசத்தின் பொருளாதார முன்னேற்றம் குறித்துப் பேசியது பாகிஸ்தான் நாட்டினரை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய நாடுகளையும் வியப்படைய வைத்துள்ளது.

ஷெபாஸ் ஷெரீஃப் கூறுகையில், முன்பு கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம், ஒரு காலத்தில் மேற்கு பாகிஸ்தானுக்குச் சுமையாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது, பாகிஸ்தானை விட வங்கதேசம் சிறந்த பொருளாதார நிலையைக் கொண்டுள்ளது என்று பொறாமை உடன் அவர் பேசியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் புலம்பல்.. பங்களாதேஷ் பாருங்க எப்படியிருக்குன்னு.. எனக்கு வெட்கமா இருக்கு..!!


பங்களாதேஷ் பொருளாதாரம் பற்றி மேலும் பேசுகையில் "நான் மிகவும் இளமையாக இருந்தபோது... பங்களாதேஷ் நம் தோள்களில் ஒரு சுமை என்று கூறப்பட்டது... இன்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த 'சுமை' எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது (பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில்)." என்று பிரதமர் ஷெரீப் கூறினார், "நாங்கள் அவர்களைப் பார்க்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம்," என்றும் கூறினார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு, IMF அமைப்பிடம் நீண்டகால கடனை பெறுவதற்காக, புதிய ஊழியர் நிலை ஒப்பந்தத்தை (staff-level agreement) வரும் ஜூலை மாத தொடக்கத்திற்குள் கையெழுத்திட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா வர்த்தக உறவு: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையும், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கியதையும் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானிடமிருந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறைந்துள்ளது, இதைத் தொடர்ந்து இந்திய தூதர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், பாகிஸ்தான், இந்தியாவுடனான நேரடி வர்த்தக உறவும் பாதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் டான் (Dawn) நாளிதழ் செய்திப்படி, இந்தக் கலந்துரையாடலின் போது, ஷெபாஸ் ஷெரீஃப்-யிடம் தொழில்துறை தலைவர்கள் பாகிஸ்தான் PTI கட்சியின் தலைவர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு, நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவுடன் வர்த்தக உறவைத் தொடங்குமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் அந்நாட்டு தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்தினர் என்று அந்த செய்தித்தொகுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவுடனான வர்த்தக உறவைத் தொடங்குவது பாகிஸ்தான் அரசும் கடந்த சில மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+