நாடாளுமன்றத்தில் சமீபத்தில் SHANTI என்ற அணு ஆற்றல் மசோதாவை நிறைவேற்றியது எல்லோருக்கும் தெரியும், இந்த மசோதா மூலம் இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் மற்றும் அணு ஆலைகளை நடத்தவும், முதலீடு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுநாள் வரையில் இத்துறையில் அரசு அமைப்புகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் இப்புதிய மசோதா மூலம் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் இந்த வரலாற்று முயற்சிக்கு பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. ஆம், வியாழக்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி ஊடகங்களிடம் பேசியபோது இந்தியாவின் இந்த நடவடிக்கையை கவனமாக கண்காணித்து வருவதாக கூறினார். இது இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆற்றல் தொடர்பான உறவில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, இந்தியாவின் SHANTI மசோதா உலகளாவிய அணு பாதுகாப்பு முயற்சிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக கூறினார். தனியார் நபர்கள் அல்லது நிறுவனங்கள் அணு பொருட்களை கையாள்வது ஆபத்து என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அணு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், 1990களில் இருந்து ரேடியோஆக்டிவ் பொருட்கள் திருட்டு, சட்டவிரோத விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் தனியார் தலையீடு அணு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் கருதுகிறது.
SHANTI மசோதாவின் நோக்கம்
இந்தியாவின் SHANTI மசோதா அணு ஆற்றல் துறையை தனியாருக்கு திறக்க மிக முக்கியமான காரணம் 2047க்குள் 100 GW அணு ஆற்றல் திறன் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக தான். இந்த மசோதா மூலம் அணு ஆற்றல் துறையில் தனியார் முதலீடுகளும், தொழில்நுட்பமும் மேம்பட்டு வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என நம்புகிறது.
பாகிஸ்தான் இந்தியாவின் அணு திட்டங்களை அடிக்கடி விமர்சித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் சொந்த அணு ஆற்றல் மற்றும் ஆணுசக்தி பாதுகாப்பு குறித்து உலக அமைப்புகளால் பல் முறை கேள்விக்குள்ளாகப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications