சிம்லா ஒப்பந்தம் உடனடி நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு.. வாகா எல்லை மூடல்..!

இந்திய அரசு சிந்து நிதி நீர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்த நிலையில், தற்போது பாகிஸ்தான் 1972-ஆம் ஆண்டு இரு நாடுகளும் கையெழுத்திட்ட சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையில் பாகிஸ்தான் தற்போது இந்தியாவுக்கு எதிரான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

1972 சிம்லா ஒப்பந்தத்தை ரத்து: பாகிஸ்தான் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 1972 சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துவது மட்டும் அல்லாமல் இந்தியாவுடனான வாகா எல்லையை மூடுவதாகவும் அறிவித்ததுள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவுடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் உடனடி நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு.. வாகா எல்லை மூடல்..!

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தை தூண்டுவது, எல்லை தாண்டிய படுகொலைகள், சர்வதேச சட்டங்களை மீறுவது மற்றும் காஷ்மீர் குறித்த ஐநா தீர்மானங்களை பின்பற்றாதது ஆகியவற்றை நிறுத்தும் வரை, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் இடைநிறுத்தம் செய்ய பாகிஸ்தான் உரிமை கொண்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC), "வாகா எல்லையை உடனடியாக மூடுவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் வழியாக இந்தியாவிலிருந்து எல்லை கடந்த அனைத்து பயணங்களும், விதிவிலக்கின்றிநிறுத்தப்படும்," என அறிவித்தது.

வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுமதியுடன் பாகிஸ்தான் எல்லை கடந்தவர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் இந்த வழித்தடம் வழியாக திரும்ப வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிந்து நீர் ஒப்பந்த மீறல் போராக கருதப்படும்: பாகிஸ்தான், சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனக்கு உரிமையான நீரின் பாய்வை இந்தியா தடுத்தால் அல்லது திசை திருப்பினால், அதனை ஒரு போர்ச்செயலாக கருதி, தேசிய பாதுகாப்பின் முழு படையுடன் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் அறிவிப்புக்கு பதிலாக உள்ளது.

இந்திய ஹைய் கமிஷன் பணியாளர் குறைப்பு: பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹைய் கமிஷனிள் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 30, 2025-க்குள் 30 தூதர்கள் மற்றும் ஊழியர்களாக குறைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களை பாகிஸ்தான் 'பர்சோனா நான் கிராட்டா' (Persona Non Grata) என அறிவித்து, உடனடியாகவோ அல்லது ஏப்ரல் 30, 2025-க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த பதவிகள் இந்திய ஹைய் கமிஷனில் இருந்து ரத்து செய்யப்பட்டதாகவும், இவர்களுக்கு ஆதரவாக பணியாற்றிய ஊழியர்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

வாகா-அட்டாரி எல்லை வர்த்தகத்திற்கு மூடல்: பாகிஸ்தான், வாகா-அட்டாரி எல்லையை வர்த்தகத்திற்கு காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான நில வழி வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தி, பொருளாதார உறவுகளை கடுமையாக பாதிக்கும். இந்த எல்லை, பொருட்கள் மற்றும் மக்கள் பயணத்திற்கு முக்கிய பங்கு வகித்து வந்தது.

சார்க் விசா விலக்கு ரத்து : சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SAARC Visa Exemption Scheme - SVES) கீழ் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் உடனடியாக ரத்து செய்து, அவை செல்லாதவை என அறிவித்துள்ளது. இதில் சீக்கிய மத யாத்ரீகர்கள் மட்டும் விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது SVES-ன் கீழ் பாகிஸ்தானில் உள்ள இந்திய குடிமக்கள், சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர, 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்களுக்கு வான்வெளி மூடல்: பாகிஸ்தான், இந்தியாவுக்கு சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தனது வான்வெளியை உடனடியாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது, இந்திய விமான சேவைகளுக்கு பயண நேரம் மற்றும் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நிறுத்தம்: இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களும், மூன்றாம் நாடுகள் வழியாக செய்யப்படும் வர்த்தகம் உட்பட, உடனடியாக நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை முற்றிலுமாக பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+