பாகிஸ்தானில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு அங்கு அரசியல் குழப்பம் நிலவிய வேளையில், பெரும் போராட்டத்திற்கு பின்பு ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ளன.

உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது பொருளாதார சீர்கேட்டைத் தாங்கமுடியாமல் அதை சமாளிப்பதற்காக அதிக கடன்களைப் பெறுவதில் போராடி வருகிறது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி இந்தியாவைச் சேர்ந்தவர். அந்தளவுக்கு ஒரு பெரும் பணக்காரரை பாகிஸ்தானில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதேவேளையில் பாகிஸ்தானில் கோடீஸ்வரர்களே இல்லை என்றும் கூறக்கூடாது.
பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இந்தியாவுக்கு அருகில் கூட இல்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது
பாகிஸ்தானிய தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு பில்டர் ஒரு கவர்ச்சியான வீட்டை உருவாக்கியுள்ளார்.
இது பாகிஸ்தானில் மிகவும் விலையுயர்ந்த வீடு என்று கூறப்படுகிறது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.125 கோடி.
பிரபலமான யூடியூப் விலாகர்கள் அந்த வீட்டைப் பார்வையிட்டு அதன் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
இது பாகிஸ்தானின் மிக அழகான வீடு என்று பலர் கூறினாலும், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வசிப்பிடமான ரூ.15000 கோடி ஆண்டிலியாவுக்கு நிச்சயமாக ஈடாகாது.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தில் நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் அம்பானி மற்றும் பலர் வசிக்கும் இந்த ஆண்டிலியா உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்பாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் மிக விலையுயர்ந்த வீடு ஆண்டிலியாவுக்கு அருகில் இல்லை என்றாலும், நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து வசதிகளுடன் அது இன்னும் பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கிறது.
பாகிஸ்தானிய மாளிகையானது ஒரு பெரிய புல்வெளி மற்றும் மாளிகையைச் சுற்றி திறந்தவெளியைக் கொண்டுள்ளது. அதை வாங்குபவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
விசாலமான மாடிகள் மாற்றங்களுக்கான இடத்தையும் வழங்குகிறது. இது ஒரு பரந்த முகப்பு மற்றும் விரிவான தரைப்பரப்பு, பெரிய கேரேஜ் பகுதி, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், தியேட்டர், லவுஞ்ச் பகுதி மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ஆடம்பர வீடு சுமார் 10 படுக்கையறைகளுடன் அமைந்துள்ளது. அவை ஒவ்வொன்றிலும் மிக நுட்பமாக கவனம் செலுத்தி பில்டர் கட்டியுள்ளார். சொத்தில் குறிப்பிடும் வகையில் சிறந்த விஷயம் என்னவென்றால், இது ஒரு சொகுசு ஹோட்டல் போன்று அல்லாமல், ஒரு சொகுசான வீடு என்ற உணர்வைத் தருகிறது.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications