பாகிஸ்தான் பொருளாதார நிலைமை கடந்த சில மாதங்களாகவே பெரும் சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் அந்நாட்டு அரசு செலவுகளை குறைக்க பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.
இந்த நிதி நெருக்கடி காரணமாக கோதுமை மாவு, அரிசி, முட்டை உட்பட பல அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதேபோல் இறக்குமதி பொருட்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
சாமானிய மக்கள் அங்கு வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலைக்கு அந்நாட்டின் பொருளாதாரம் சென்றுள்ளது. முஸ்லீம் மக்கள் அதிகம் கொண்ட பாகிஸ்தானில் பல பகுதிகளில் இந்து மக்கள் இன்றும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக இருந்தாலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்து மக்களில் சிலர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.
அவ்வரிசையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த பல மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் தீபக் பெர்வானி.
யார் இந்த தீபக் பெர்வானி?
தீபக் பெர்வானி, பாகிஸ்தானின் மிர்பூர் காஸ் பகுதியில் 1973 ஆம் ஆண்டு பிறந்தார். தீபக் பெர்வானி பாகிஸ்தானின் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்.
தீபக் பெர்வானி பாகிஸ்தான் நாட்டில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் நடிகரும் ஆவார். அதுமட்டுமின்றி தீபக் பாகிஸ்தான் பேஷன் துறையில் பல விருதுகளை வென்றுள்ளார். 2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, அவரது ஆண்டு நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.71 கோடியாக உள்ளது.
நடிகர்
தீபக் ஆடை வடிப்பாளர் மட்டுமின்றி ஒரு பிரபல நடிகராவும் உள்ளார். அவர் பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி தொடர்களான மேரே பாஸ் பாஸ் (ஹம் டிவி) மற்றும் கடூரத் (2013 இல் ஹம் டிவியில்) நடித்துள்ளார். மேலும் நகைச்சுவையான காதல் படமான பஞ்சாப் நஹி ஜாங்கி (2017) நடித்துள்ளார்.
நவீன் பெர்வானியின் உறவினர்!
நவீன் பெர்வானி பாகிஸ்தானின் ஒரு ஸ்னூக்கர் பிளேயர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது அதில் பாகிஸ்தானின் சார்பில் நவீன் பங்கேற்றார். ஆனால் அதில் 6-5 என்ற கணக்கில் வெளியேற்றப்பட்டார். இவர் தீபக் பெர்வானியின் உறவினராவார்.
அதளபாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!
பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைந்து, அதள பாதாளத்துக்குச் சென்றுள்ளது. அந்நாட்டில் பால் லிட்டர் ரூ.210 ஆகவும், கோழிக்கறி கிலோ ரூ.780 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுவதால் மக்கள் தவிக்கின்றனர்.
கொரோனா பாதிப்பு
பாகிஸ்தான் பொருளாதாரம் கொரோனா பரவலுக்குப்பின் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அங்குநிலவும் அரசியல் ஸ்திரமற்றச் சூழல், தீவிரவாதம், தீவிரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றாலும்,சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்கி வருகின்றன.
பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானுக்கு உதவுவதாகக் கூறிய சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.
பொருளாதாரத்தில் வலுவற்ற நாடு!
பொருளாதாரத்தில், தெற்காசியாவின் வலுவற்ற நாடாகப் பாகிஸ்தான் உள்ளதாக உலக வங்கி கூறுகிறது. எனவே இப்போதைக்கு, பிற நாடுகளின் ஆதரவு மட்டுமே பாகிஸ்தான் நாட்டை மோசமான விளைவுகளில் இருந்து காக்க முடியும்.
உலக வங்கி மற்றும் IMF
கொரோனோ பாதிப்புக்கு பின் பாகிஸ்தானின் வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அரசிடம் இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏறக்குறைய இலங்கை சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை சமனிலைப்படுத்த டாலர் தேவை என்பதால், பாகிஸ்தான் அரசு உலக வங்கி மற்றும் IMF இடம் கையேந்தி நிற்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications