இந்தியாவின் பெரிய பணக்காரர் யார் என்று எங்கு போய் கேட்டாலும் சொல்வார்கள் அம்பானி குடும்பம்தான் என்று. அவரை விட்டால் அதானி, டாடா, பிர்லா, ஷிவ் நாடார் என்று பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து செல்வந்தர்கள் பட்டியலில் டாடா, பிர்லா குடும்பங்கள்தான் முதலில். பின்னர் அம்பானி. இப்போது இரண்டு தலைமுறைகளில்தான் அம்பானி முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார். சமீப காலமாக அதானி 2ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தானில் அப்படியில்லை. சுதந்திரம் வாங்கிய நாளில் இருந்து நாட்டின் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டாலும் மியான் முகமது மான்ஷா வைத்தான் கையைக் காட்டுகின்றனர்.
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் இந்த மியான் முகமது மான்ஷா. பாகிஸ்தானின் முதல் பில்லியனர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
முகமது மான்ஷாவின் குடும்பம் கொல்கத்தாவில் வசித்தது வந்தது. 1947இல் நாடு சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டவுடன் மான்ஷாவின் குடும்பம் பாகிஸ்தானுக்கு குடியேறியது. மான்ஷாவின் தந்தையும் சித்தப்பாக்களும் சேர்ந்து கடந்த 1951 ஆம் ஆண்டில் நிஷாத் மில்ஸ் என்ற ஆலையைத் தொடங்கினர்.
மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற மான்ஷா, படித்து முடித்தவுடன் நாடு திரும்பி தனது குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். போர்ப்ஸ் தகவல்களின்படி, நிஷாத் குரூப் பாகிஸ்தானின் மிகப்பெரும் பருத்தி ஆடைகள் ஏற்றுமதியாளர்கள். அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் தொழில்குழுமம்.
மான்ஷாவின் நிறுவனம் இன்ஷூரன்ஸ் தொழில், சிமெண்ட், மின்சாரம் தயாரிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளது. கடந்த 1991இல் முஸ்லிம் கமர்ஷியல் வங்கியை கைப்பற்றிய மான்ஷா 2008இல் அதில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை முஸ்லிம் கமர்ஷியல் வங்கிக்கே விற்று விட்டார்.
மான்ஷாவின் தற்போதைய சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகும். இதை இந்தியாவின் முதல் செல்வந்தரான அம்பானியின் 90 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை. இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்கள் இருந்தாலும் பாகிஸ்தானின் 2ஆவது பணக்காரர் என்ற பெருமையை மியான் முகமது மான்ஷா பெற்றுள்ளார். முதல் பணக்காரர் ஷாகித் கான்.

மான்ஷாவுக்கு பல வெளிநாடுகளில் சொத்துகள் உள்ளன. லண்டனில் மிகப் பெரிய எஸ்டேட் வைத்துள்ளார். ர்சிடஸ்-இ ரகம், ஜாகுவார் கன்வெர்டிபிள், போர்ஷே, பிஎம்டபிள்யூ 750, ரேஞ்சு ரோவர், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட ஏராளமான சொகுசுக் கார்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார்.
பாகிஸ்தானில் அதிகளவு வருமான வரி செலுத்துபவர்கள் பட்டியலில் மான்ஷாவின் குடும்பத்தார்தான் உள்ளனர். கிஸ்தானில் பெரும் மரியாதைக்குரியவராக மான்ஷா உள்ளார். பல அமைப்புகளின் போர்டுகளில் உறுப்பினராக இருக்கிறார். நாட்டின் தலைசிறந்த குடிமகனாக மான்ஷாவுக்கு அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று சித்தாரா இ இமிதியாஸ் என்ற விருதை அளித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications