நமது அண்டை நாடான பாகிஸ்தான் நம் நாட்டிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. ஆனால் அந்த நாட்டு மக்களோ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமல் விலைவாசி உயர்வு ,வேலை வாய்ப்பின்மை என பல்வேறு பிரச்சனைகளால் தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தையும் நாம் ஒப்பீடு கூட செய்ய முடியாத அளவிற்கு பாகிஸ்தானின் பொருளாதாரம் கீழே இருக்கிறது. பாகிஸ்தான் டிஜிபி 350 பில்லியன் டாலர்கள் தான் , ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் 4 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது. இந்திய பொருளாதாரத்தில் ஒரு சிறு துளி தான் பாகிஸ்தானின் பொருளாதரமாக இருக்கிறது.

ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல பங்குச்சந்தை ரீதியாக பார்க்கும் போதும் கூட இந்தியா தான் பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது. ஃபார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் இந்திய பங்குச்சந்தையையும் பாகிஸ்தான் பங்குச் சந்தையும் அதில் பட்டியல் இடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் இந்திய பங்குச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களையும் ஒப்பீடு செய்து ஒரு சுவாரசியமான அறிக்கையை விட இருக்கிறது. ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாயில் 0.30 காசுகள் என கணக்கீடு செய்து ஃபார்ச்சூன் இந்தியா இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 476 முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 5.6 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பை விட பெருமளவு குறைவு. இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனம். லார்ஜ் கேப் பிரிவில் வரக்கூடிய இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 6.26 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மற்றொரு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலிவரின் சந்தை மூலதன மதிப்பு 5.48 லட்சம் கோடி ரூபாய். இது கிட்டத்தட்ட பாகிஸ்தான் பங்கு சந்தையின் மொத்த மதிப்புக்கு நிகரானதாக இருக்கிறது. மே 14ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1590 ரூபாய் , இந்துஸ்தான் யுனிலிவரின் ஒரு பங்கு மதிப்பு 2,340 ரூபாய் ஆகும்.
பாகிஸ்தான் பெஞ்ச்மார்க் குறியீடான KSE-100 Indexஇல் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.31 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மூலதனமே 3.34 லட்சம் கோடி ரூபாய் . அதாவது இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு கூட பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டின் மொத்த மதிப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது .
பாகிஸ்தானின் பங்குச்சந்தையில் 10 சதவீதம் சரிவு ஏற்பட்டால் கூட அதன் KSE-100 Indexஇன் மதிப்பு 2.98 லட்சம் கோடியாக மாறி டைட்டன் கம்பெனியின் சந்தை மூலதன மதிப்பான 3.1 லட்சம் கோடியை விட குறைந்த விடும். அதேபோல 15 சதவீதம் மதிப்பு குறைந்தால் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்புக்கு நிகரானதாக மாறி விடும்.
பாகிஸ்தான் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களாக நெஸ்ட்லே ,கோல்கேட் , பாகிஸ்தான் டொபாக்கோ, யூனிலீவர் ஃபுட்ஸ், ஜிஎஸ்கே மற்றும் அபோட் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. மொத்தமாக இவற்றின் சந்தை மூலதன மதிப்பு 36 , 660 கோடி ரூபாய். இதே நிறுவனங்கள் இந்தியாவிலும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன இவற்றின் சந்தை மூலதன மதிப்பு இந்திய பங்குச் சந்தையில் 14.8 லட்சம் கோடி ரூபாய். அதாவது பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய சந்தையில் இவற்றின் மதிப்பு 40 மடங்கு அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் இந்த 6 பன்னாட்டு நிறுவனங்களின் வருமானம் 17,978 கோடி ரூபாய் அதுவே இந்தியாவில் இந்த நிறுவனங்களின் வருமானம் 1.73 லட்சம் கோடி ரூபாய் . பாகிஸ்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ogdc இருக்கிறது . இதன் சந்தை மூலதன மதிப்பு 23 , 812 கோடி ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ்யின் சந்தை மூலதன மதிப்பு 18.64 லட்சம் கோடி ரூபாய்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications