பாகிஸ்தான் பொருளாதாரம் எப்போது என்னாகும் என்று தெரியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது, ஒருபக்கம் சீனா கண்களை மூடிக்கொண்டு கடன்களையும், நிதியுதவியும் அளித்து வந்தாலும் சீனா பெரிய சிக்கல் என்பது பாகிஸ்தான் அரசு புரிந்துக்கொண்டது. இதனால் IMF அமைப்பிடம் இருந்து கடன் பெறுவதற்கான வழிகளை தேடி வருகிறது பாகிஸ்தான் அரசு.
ஆனால் IMF பல்வேறு காரணிகளை கண்காணித்து அதன் அடிப்படையில் தான் கடன் கொடுப்பது குறித்து முடிவு செய்ய உள்ளது. இப்படி இருக்கும் போது அதிகப்படியான தாமதமாகி வருகிறது, இந்த இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வல்லுனர் முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளார், இந்த பரிந்துரை பாகிஸ்தான் அரசுக்கு மட்டும் அல்லாமல் அந்நாட்டு மக்களுக்கு சிறப்பான முடிவாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் கருப்பு பணம் அதிகளவில் உள்ளது, இதை சரி செய்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தானில் அதிக மதிப்புடைய நாணயமாக இருக்கும் 5000 ரூபாய் நோட்டை பணபுழக்கத்தில் இருந்து முழுமையாக நீக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அந்நாட்டு எனர்ஜி துறை பொருளாதார வல்லுனர் அம்மார் கான் ஒரு பாட்காஸ்ட் வீடியோவில் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது. இந்த பணம் தான் நாட்டின் பொருளாதாரத்தை இயக்குகிறது, ஆனால் போதுமான வரி இதில் இருந்து அரசுக்கு கிடைப்பது இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை. இதனாலேயே பாகிஸ்தானில் நிதி நெருக்கடியும், அதிகப்படியான பணவீக்கமும் உருவாகியுள்ளது.

IMF உதவி இல்லாத பட்சத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வர முடியாது என்பது தான் தற்போதைய நிலை, இதில் இருந்து மீண்டு வர பாகிஸ்தானில் 5000 ரூபாய் நோட்டில் பதுக்கப்பட்டு வரும் பணம் சந்தைக்கு வர வேண்டும். இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் பணம் தான் எல்லாம். முறையற்ற பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கிறது.
அதிகப்படியான பணம் பதுக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் வங்கிகளிடம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் கடன் கொடுக்க முடியாமல் உள்ளது. இதை சரி செய்ய 5000 ரூபாய் நோட்டை தடை செய்து இந்த பணத்தை மொத்தமாக வங்கி கட்டமைப்புக்குள் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மேம்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 1000 ரூபாய் மற்றும் பழைய 500 ரூபாய் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்பு வரி வசூல் அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரிய அளவில் பலன் அளித்துள்ளது என்றும் இன்த பாட்கேஸ்ட்-ல் பாகிஸ்தான் எனர்ஜி துறை பொருளாதார வல்லுனர் அம்மார் கான் தெரிவித்துள்ளார். உங்க கருத்து என்ன மறக்கமாக கமெண்ட் பண்ணுங்க..!!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications